பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள்..!

2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக முப்பத்தொரு இலட்சத்து எழுபத்தேழாயிரம் [31, 00,000] ரூபா வரை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திடமும் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திடமும் வழங்கியுள்ளோம். இந்த நிதியினைக் கொண்டு 2018ஆம் ஆண்டில் எமது கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை இத்துடன் இணைத்துள்ளோம். சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் இருந்து, எமது சங்க யாப்பு விதிகளின்படி, எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரிற்கும் தனித்தனியே கணக்கறிக்கை அனுப்பப்படுவதுடன், எமது வருடாந்த பொதுக்கூட்டத்திலும் கணக்காளரால் வாசிக்கப்பட்டு அங்கத்தவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு, அதே கணக்கறிக்கை எமது சங்கம் பதியப்பட்டுள்ள நகரசபைக்கு [நகரம் : மர்லி லு றுவா – MARLY LE ROI ] அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share:

No comments:

Post a Comment