"பப்பா ஜெயமேரி அறக்கொடை"நிதியத்தின் ஊடாக மாதகல் காட்டுப்புலம் பிரதேச வாழ் 240 குடும்பங்களுக்கான உதவுதொகைக் கொடுப்பனவு 2019..!

"பப்பா ஜெயமேரி அறக்கொடை"நிதியத்தின் ஊடாக மாதகல் காட்டுப்புலம் பிரதேச வாழ் 240 குடும்பங்களுக்கான உதவுதொகைக் கொடுப்பனவு 2019.உழைத்து அறம் செய்.  அன்ரனி (றெட்டி) மற்றும் அவரது சகோதரர்களும் இணைந்து 2019 ம் ஆண்டை    வரவேற்கும் முகமாக மாதகல் கிராமத்தில் காட்டுப்புலம் பிரதேசவாழ் மிக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 240 குடும்பங்களுக்கு ஒரு  குடும்பத்திற்கு 2000/-வீதம் அந்தப்பிரதேச கிராமசேவையாளரூடாக தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உதவுதொகைக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. தைப்பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடு முகமாக ஒரு சிறு தொகையாக இருந்தாலும் வருடத்தின் தொடக்கத்தில் எல்லோரும்  சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இவ் உதவுதொகைக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தங்களாலான அறத்தினை செய்ய வேண்டும். அல்லது அறம் செய விரும்ப வேண்டும். தாய்தந்தையரான  "பப்பாஜெயமேரி" அறக்கொடை நிதியத்தினூடாக இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. 2017ம் மற்றும் கடந்த 2018ம் ஆண்டிலும் 4000/- வீதம் 106 குடும்பங்களுக்கு இவ் உதவு தொகைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் "ஊருக்கு கை கொடுப்போம்" என்ற மகுட வாசகத்தின்  மூலம் "பப்பா ஜெயமேரி அறக்கொடை" நிதியத்தின் ஊடாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் சென்ஜோசாப், விக்கினேஸ்வரா, நுணச பாடசாலை மாணவர்களுக்கான கல்விச் செலவிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது. அறம் செய விரும்புவோம், அறம் செய்வோம்.Share:

No comments:

Post a Comment