பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்..!

பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்  மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்.


இப்பணத்தினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு தங்கராசா அவர்கள்,  மாதகல் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா அவர்களிடம், குளம் அமைக்கும் பொறுப்பாளரான திரு சிற்றம்பலம் அவர்களின் முன்னிலையில் 17-01-2019 அன்று வழங்கினார்.


இத் திட்டத்தின் நன்மைகளை அறிந்து பிரித்தானியாவில் இயங்கும் இளவாலை சென் கென்றீஸ் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் [2,20,000]ரூபாவினை பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


மாதகல் கிழக்குப் பகுதியில்  கோட்டகிரி குளம் அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள் :


1- நந்நீர் பற்றாக்குறையினை போக்குதல்
2- இயற்கை தரும் மழைநீரை நீண்ட காலத்திற்கு சேமித்தல்
3- நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துதல் 


எமது கிராமத்தின் எதிர்காலத்திற்கு நந்நீர்த் தேவையின் அவசியமறிந்து, இந்த நல்லதொரு திட்டத்திற்கு எமது சங்கத்தின் மூலம் பங்களிப்பு செய்ததை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது. 


பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்


Share:

No comments:

Post a Comment