மாதகல் காஞ்சிபுரம் வீதி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக படுமோசமான நிலையில்..!

மாதகல் காஞ்சிபுரம் வீதி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் வீதி. கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பாடசாலை மாணவர்கள், சுகவீனப்பட்டவர்கள், தோட்டக்காரர்கள், அரச உத்தியோகத்தர்கள் இப்படி பலதரப்பட்ட மக்கள் பயணம் செய்யும் வீதியின் நிலை இதுதான். எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஊர் மக்களாகிய எங்களுக்கு தெரியும். இவ்வீதி திருத்தப்படாமைக்குரிய காரணிகள் என்ன? யார் காரணம்? வீதியின் நீளம் 2.2k.m
1) பிரதேச சபையா (வலி தென்மேற்கு)
2) பிரதேச செயலகமா
3) யாழ் மாவட்ட செயலகமா
4) அரச அதிகாரிகளா
5) எமது தொகுதி அரசியல்வாதியா
6) உள்ளூர் அரசியல் வாதிகளா
7) புலம்பெயர்ந்து இயங்கும் அரசியல்வாதிகளா
8) மக்களா
ஆனால் குறிப்பிட்ட அனைவரிடமும் எழுத்து மூலமாகவும் பல தடவைகள் பல வருடங்களாக அலைந்து திரிந்து அனைத்து விதமான ஆவணங்களும் கொடுக்கப்பட்டன, மக்களாலும் பொது அமைப்புக்களும் கொடுக்கப்பட்டன. எமது தொகுதி அரசியல் வாதியிடமும் பல தடவைகள் சென்று கொடுக்கப்பட்டன. பல தடவைகள் பத்திரிகைகளும், சக்தி வானொலி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேல் எங்களால் என்ன செய்ய முடியும் 2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இதற்கான முன்மொழி கொண்டுவரப்பட்டு (V.சிற்றம்பலம், V.சுப்ரமணியம்) ஆகியோரால் ஏற்கப்பட்டு 2017ம் ஆண்டுக்கிடையில் காப்பற் வீதியாக போடப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டு அதற்கான ஆவணமும் வழங்கப்பட்டு (2017ம் ஆண்டுக்குரிய செயற்திட்டம்) ஊரில் உள்ள தலைவர்கள், அரசியல்வாதிகள், அரச உயர் பதவியில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர். 2019ஆம் ஆண்டிலாவது  வீதி புனரமைக்கப்படும் என நம்புகிறோம். காஞ்சிபுரம் வீதி மட்டுமல்ல மாதகலில் பல வீதிகள் பல வருடங்களாக கவனிப்பாரற்று இருக்கின்றது. உதாரணத்திற்கு சில வீதிகள்
1) மயில்வாகனப் புலவர் வீதி
2) தபாற்கந்தோர் வீதி
3) வாய்க்கால் வீதி
4) காளி கோவில் வீதி
5) நாவலர் வீதி
6) பிள்ளையார் கோவில் வீதி
7) மடத்தடி வீதி
8) உப்புத்தரவை வீதி இப்படி இன்னும் பல வீதிகள் திருத்தப்படாமல் தேடுவாரற்று இருக்கின்றது.
இவ்வருடம் மயில்வாகனப் புலவர் வீதிக்கு கம்பநொலியா திட்டத்தின் மூலம் 20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அளவீடு செய்யப்பட்டு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது. (இதற்கு காரணம் அரசியல்வாதிகள்) யாரிடம் சென்று முறையிடுவது.!!!
 ஊரில்இருந்து S.சுபாஸ்கரன்


Share:

No comments:

Post a Comment