காந்தி ஐயாவின் 100வது ஜனன தினம்..!

காந்தி ஐயாவின் 100வது ஜனன தினம்
-------------------------------------------------------------
காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பொண்னம்பலம் கந்தையா அவர்களின் 100வது ஜனன தினம் இன்றாகும் (19.12.2018). இவர் 03.02.2017 அன்று தனது 99வது வயதில் இறைபதம் அடைந்திருந்தார்.
பல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த திருகோணமலையின் மூத்த மகன் என போற்றப்படும் பொ. கந்தையா (காந்தி ஐயா) யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் என்னும் கிராமத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள நுணைசை முருகமூர்த்தி கோவிலடியைச் சேந்த பொன்னம்பலத்திற்கும் - நன்னிப்பிள்ளைக்கும் 2வது மகனாக 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி பிறந்தார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை தற்போது முருகமூர்த்தி வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற மாதகல் அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5ம் வருப்பு வரை கற்று பின்னர் 6ம் 7ம் வகுப்பினை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் 8ம் வகுப்பினையும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் 9ம் வகுப்பினையும் கற்று ஆசிரியர் தரதரப்பதிரத்திலும் தேர்ச்சி பெற்று அப்பாடசாலையிலேயே உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
எனினும் வவுனியாவில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமணம் பெற்றார் அப்போது இப்பாடசாலையில் 27 மாணவர்கள் கற்றனர். இதன்போது சம்பளமாக 43.00 ரூபா பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையிலும் 1943 ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் 1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கி சேவையாற்றியிருந்தார்.
பின்னர் 1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.
இருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
இறுதியாக திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் 1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்து பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் சுகவீனம் காரணமாக 03.02.2017 அன்று இறை பணிக்காக இறைவனடி சேர்ந்தார்.
Thanks Sanjeevan Thurainayagam facebook & kamal sk
மாதகலைச் சேர்ந்த திரு. பொ. கந்தையா (காந்தி மாஸ்ரர்)….

http://www.mathagal.net/2017/02/mathagal-28.html
Share:

No comments:

Post a Comment