யாழ் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை வலிகாம பாடசாலைகளில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக நிகழ்கின்றது..!

யாழ் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை வலிகாம பாடசாலைகளில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக நிகழ்கின்றது. படிப்பிலும் சரி, சுகாதாரத்திலும் சரி, நூலகத்திலும் சரி, பொது ஈடுபாட்டிலும் சரி ஆனால் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறையிலும் மிகுந்த அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆனாலும்  அதிபர், ஆசிரியர்கள் விடா முயற்சியால் படிப்பிலும் பிற செயற்பாட்டிலும் சாதனை புரிந்து வருகின்றது. பாடசாலையின் முக்கிய தேவைகளில் ஒன்றான அலுமாரிகள் இல்லாமை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றது. பாடசாலை ஆவணங்கள் பிள்ளைகளின் ஆவணங்கள் அனைத்தும் நிலத்திலும் மேசைகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. 

அதிபர், பழைய மாணவர்கள் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது நிறுவனங்கள்  இப்படி பல்வேறு தரப்பட்டவர்களை கேட்டு கிடைக்காத நிலையில் பெற்றோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினருமாகிய திருமதி.வா. சிவனேஸ்வரியை பெற்றோர் அனுப்பியபோது உடனடியாக கட்சியுடன் தொடர்பு கொண்டு நேரடியாக வந்து பார்வையிட்டு அடுத்த நாளே ஒரு பெரிய அலுமாரியை( 8x6 முதிரை) எழுபதாயிரம்(70000) பெறுமதியான அலுமாரியை தமிழ் தேசிய மக்கள் முன்னனி கல்விக்கு கரம் கொடுப்போம் பொறுப்பாளர் திரு .கருணாகரன் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர், கல்விக்கு கரம் கொடுப்போம் பொறுப்பாளர், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா. சிவனேஸ்வரி, மற்றும் இணைப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

இன்னும் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் சாதகமான பதில் அளிக்கின்றோம் என்று கூறப்பட்டது. 
அதிபர், ஆசிரியர்கள்
மாணவர்கள், பெற்றோர்கள்
பழைய மாணவர்கள்


Share:

No comments:

Post a Comment