புனித தோமையார் ஆலய முகப்பு புதுப்பொலிவு பெற உதவியவர்களை நன்றியுணர்வுடன் நினைவில் கொள்கிறோம்..!

புனித தோமையார் ஆலய முகப்பு புதுப்பொலிவு பெற உதவியவர்களை நன்றியுணர்வுடன் நினைவில் கொள்கிறோம். மாதகல் புனித தோமையார் ஆலய புனருத்தாரண பணிகளின் அடிப்படையில் முதற்கட்டமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் புனித தோமையார் ஆலய இறைமக்களின் நிதிப்பங்களிப்பால் ஆலய முகப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் முடிக்கப்பட்டு 30/12/2018ம் திகதி ஞாயிறு மாதகல் பங்குத்தந்தையால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனித தோமையார் ஆலயம் அடித்தளமிடப்பட்டு 150வது ஆண்டு நினைவுநாளில் ஆலய முகப்பு பங்குத்தந்தையால் ஆசீர்வதிக்கப்படவுள்ளது. இவ்வேலைகளை உரிய காலத்தில் வேலைகளின் முன் திட்டமிடலுக்கமைய செய்து முடிப்பதற்கு வழிவகுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி கூறும் அதேவேளை நிதிப்பங்களிப்பு வழங்கிய புனித தோமையார் ஆலய இறைமக்கள் ஒவ்வொருவரையும் அருட்பணிச்சபை உறுப்பினர்களையும், கட்டடக்குழு உறுப்பினர்களையும் நினைவுகூருவதுடன் புனருத்தாரண வேலைகளை செய்த கட்டுமான ஒப்பந்தகாரரையும் இப்பணிகளில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களையும் நன்றியுணர்வுடன் நினைவில் கொள்கிறோம். மேலும் புனித தோமையார் ஆலயம் முழுமையாக புதுப்பொலிவு பெற மேற்கொள்ளும் பணிகளை பொறுப்புடன் செயற்படுத்த அனைவரினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் எதிர்பார்க்கப் படுவதையும் முன்வைக்க விரும்புகின்றோம் என்றும் இறைவனின் பணியில் அருட்பணி R H சகாயநாயகம் பங்குத்தந்தை மாதகல் 

அன்பார்ந்த புனித தோமயைார் ஆலய இறைமக்களே!
இறை யேசுவின் நாமத்தின் பேரில் அன்பான வணக்கம்.
மாதகல் மண்ணிலே 1884ம் ஆண்டு கட்டப்பட்ட மாதகல் புனித தேரமயைரர் ஆலயம் பழம்பெரும் ஆலயமாகவும், இறைமக்களின் விசுவாசத்தையும் வளர்க்கும் இல்லமாகவும் விளங்கி வருவதை யாவரும் அறிவீர் இந்த ஆலயம் போரினாலும், பழமையினாலும் பாதிக்கப்பட்டதனால் மிகவும் அவசரமாக புனருத்தாரண வேலைகள் செய்ய வேண்டிய கட்டாய தேவை ஏற்யட்டுள்ளது.
எனவே இம்மாபெரும் வேலையை உள்ளூர் மக்களின் நிதியினாலும்,
வெளிநாட்டில் வாழும் உறவுகளின் நிதி பங்களிப்புக்களாலும் செய்யலாமென செயற்திட்டத்தை வகுத்து முதறகட்டமாக கிடைக்கப்பெற்ற நிதியின் அடிப்படையில் ஆலய முகப்பு வேலையை கட்டம் 1 ஆக ஆரமபித்து தற்பேரது 60 வீதமான வேலைகள் செய்யப்பட்ட நிலையில் தெரடர் வேலைகள்செய்யப்பட்டு வருகின்றது. இந்நேரத்தில் இவ்வேலைகளுக்கு நிதியுதவி செய்த அன்புள்ளங்களை நன்றியுணர்வுடன் நினைவில் கொள்கிறோம்.
இவற்றுடன் மேலும் ஆலய ஏனைய பகுதிகளின் புனருத்தாரண வேலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஏனைய வேலைகளையும் செய்வதற்கு நிதித்தேவை எதிர்பார்க்கப்படுவதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு அன்புள்ளங்களும் தேவை உணர்ந்து தமது நிதிப்பங்களிப்புகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கி இந்த பணிகளை துரிதமாக முன்னெடுத்து இவ் ஆலயம் மீளவும் புதுப் பொலிவு பெற ஆவண செய்யுமாறு வேண்டிநிற்கின்றேன்.

E mail ID : St.thomaschurchmathagal0307@gmail.com
வங்கி கணக்கு இல : 8060121154, கொமர்சல் வங்கி., யாழ்ப்பாணம்
ஆலயத் தொடர்புகளுக்கு: 021 221 1868 /077 2247664

தங்களின் உதவியை கோரும், அருட்பணி R.H. சகாயநாயகம்
பங்குத்தந்தை (மாதகல்)
" புனித தோமையாரின் ஆசீர் அனைவருக்கும் நிறைவாக கிடைப்பதாக"

Share:

No comments:

Post a Comment