வலி.தென்மேற்கு பிரதேச சபை மூலம் மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் ஊடாக மேற்கொள்ளப்படும் மாதகல் போதி மயான வேலைதிட்டம்..!

புனரமைப்பின் இறுதி கட்டத்தினை எட்டியுள்ள போதி மயான தகன கொட்டகை வேலை.
வலி.தென்மேற்கு பிரதேச சபை மூலம் மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் ஊடாக மேற்கொள்ளப்படும் மேற்படி வேலைதிட்டம் பெரும்பகுதி வேலைகள் முடிவுற்றுள்ளன.தரைப்பகுதி வேலைகளே எஞ்சியுள்ளன.மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையமும் மாதகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வா.சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு மாதகல் போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக மானிப்பாய் பிரதேச சபையால் மீள் புனரமைப்பிற்கு ரூபா 650000 /- ( ஆறு லச்சத்து ஐம்பது ஆயிரம் ) ஒதுக்கப்பட்டு மாதகல் இளைஞர் சங்கத்தால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
Share:

No comments:

Post a Comment