மாதகல் கிராமத்தில் "ஊருக்கு கை கொடுப்போம்" என்ற மகுட வாசகத்தின் மூலம் தனது தாய் தந்தையரின் பெயரில் "பப்பா ஜெயமேரி அறக்கட்டளை" நிதியத்தினூடாக..!

மாதகல் கிராமத்தில் "ஊருக்கு கை கொடுப்போம்" என்ற மகுட வாசகத்தின் மூலம் தனது தாய் தந்தையரின் பெயரில் "பப்பா ஜெயமேரி அறக்கட்டளை" நிதியத்தினூடாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆறு மாணவர்களுக்காக உதவு தொகை கொடுப்பனவாக ரூபா 10000/- வீதம் பாடசாலை அதிபரூடாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டு கையளிக்கப்பட்டது. அதே  போன்று யா /மாதகல் நுணசை வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க  ஒரு மாணவிக்கான உதவு தொகைக் கொடுப்பனவாக 5000/- வும் பாடசாலை உபகரணத்(அலுமாரி) தேவைக்கென 22000/- நிதியும் வழங்கப்பட்டது.மேலும் மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் சித்தியெய்திய ஒரு மாணவருக்கான 10000/-கொடுப்பனவும் பப்பா ஜெயமேரி அவர்களின் புதல்வனும் எனது நண்பனுமான (றெட்டி )அன்ரனியால் வழங்கப்பட்டது.தொடர்ந்து வரும் வருடங்களிலும் பப்பா ஜெயமேரி அறக்கட்டளை நிதியத்தினூடாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இவரின் சேவையை எம் இணையத்தின் சார்பில் பாராட்டுகிறோம்.

Share:

No comments:

Post a Comment