தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மாதகல் விக்னேஸ்வரா கல்லூரியில் சொந்த மண் சொந்த மரங்கள் குழுவினரால் மரம் நடும் விழா மற்றும்..!

மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் மாதகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா.சிவனேஸ்வரி ஏற்ப்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர்கள் விக்னேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் பற்றைகளை வெட்டி சிரமதானம் மூலம் துப்பரவாக்கப்பட்டன மற்றும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலவசமாக கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளுடனும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மரக்கன்றுகளும் சேர்ந்து  (19.11.2018)அன்று விக்னேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் வைக்கப்பட்டன. இன் நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் திரு.கஜேந்திரகுமாரும் மற்றும் இணைப்பாளர்கள், உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர். மற்றும் பாடசாலை அதிபரால் பல உதவிகள் கேட்டு கோரிக்கைகள் தலைவரிடம் முன்வைக்கப்பட்டன. அதில் சில உதவிகள் செய்யலாம் என உறுதிமொழி வாங்கியுள்ளார். இன்று செய்த உதவிகளுக்கும் திருமதி.வா.சிவனேஸ்வரிக்கும்,தலைவர் மற்றும் இணைப்பாளர் அனைவருக்கும் மாதகல் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Share:

No comments:

Post a Comment