தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்றிட்த்தில் மாதகல் கிழக்கு சித்தி விநாயகர் முன்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புலமை பரிசிலில் சித்தி அடைந்த மாணவர்களையும்..!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாதகலைச் சேர்ந்த மானிப்பாய் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்  திருமதி. வாசுதேவன் சிவனேஸ்வரி முயற்சியால் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தில் மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் ஐந்து வயது மாணவர்களையும், புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த விக்கினேஸ்வரா மாணவர்களையும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்களையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை, கொப்பிகள் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்விற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரனும், பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள், மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு உதவியழித்து, கௌரவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும், உறுப்பினர் திருமதி. சிவனேஸ்வரிக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 06.10.2018 சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு சித்தி விநாயகர் முன்பள்ளியில் நடைபெற்றது.Share:

No comments:

Post a Comment