மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஆண்டுவிழாவும், சபா.அருள்சுப்பிரமணியம் எழுதிய மாதகல் மாண்மியம் புத்தகத்தின் மீள் வெளியீட்டு நிகழ்வுகளும்..!

மாதகல் மான்மியம் - இரண்டாம் பதிப்புக்கான வெளியீடு கடந்த 26-08-2018 அன்று மாதகலில் இடம்பெற்றது.
திரு சபா. அருள்சுப்பிரமணியம், திரு. வி. சிற்றம்பலம் ஆகியோரின் உழைப்பில் உருவான மாதகல் பற்றிய பல தகவல்களைத் தாங்கிய இந்நூல் மாதகல் கல்வி அபிவி ருத்திச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
கனடா மாதகல் நலன்புரி சங்கமும், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமும் 25 ஆண்டை நிறைவு செய்வதால் அதன் பதிவாக இந்நூல் வெளியிடப்பட்டது.
விழாவின் தலைமை விருந்தினராக யாழ். பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் சிறி சற்குணராசா அவர்களும்
சிறப்புவிருந்தினராக விஞ்ஞானப் பேராசிரியர் பு. ரவிராஜன் அவர்களுடன்
யாழ்.தொழிற் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. அ. அன்ரன் தனேஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
மாதகல் மான்மியம் நூலுடன் இளம்மழலை, முதுமழலைச் சிறாருக்ககான அடிப்படைச் சொற்களை அறிமுகம் செய்யும் “சொற்சிமிழ்“ நூல்கள் இரண்டும் வெளியிடப் பட்டன.
முதற்பிரதிகளை திரு. அன்பழகனும், திருமதி. பு. இராம நாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

மாதகல் மான்மியம் இரண்டாம் பதிப்பிற்கு, பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பங்களிப்பு...!மாதகல் மான்மியம் நூலின் 2 ஆம் பதிப்பில் இடம்பெறவுள்ள பிற்சேர்க்கையில்..!

 

மாதகல் மான்மியம் இரண்டாம் பதிப்பின் தகவல் சேகரிப்பு,  கனடா மாதகல் நலன்புரி சங்கத்தின் வெள்ளிவிழா நினைவுப் பதிப்பாக வெளிவரவுள்ளது...!

Share:

No comments:

Post a Comment