கேலிச்சித்திர கலைஞர் மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை ஆவணப்படுத்திய ‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா லண்டன் கரோ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்...!

சமூக அரசியல் சீர்கேடுகளை அஸ்வினின் காட்டூன்கள் பிரதிபலித்து காட்டுகின்றன

‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தி சூரியபிரகாசம்

கேலிச்சித்திர கலைஞர் மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை ஆவணப்படுத்திய ‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா லண்டன் கரோ பல்கலைக்கழகத்தில் 28 ஆம் திகதி சனிக்கிழமை (July) நடைபெற்றது.

தமிழ் தகவல் நடுவதின் (TIC) ஏற்பாட்டில்  நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விசேட விருந்தினராக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Paul Scully யும்

பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் இயக்குனருமான ஆனந்தி சூரியபிரகாசம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கேற்றல் தமிழ் தாய் வாழ்த்து வரவேற்பு நடனம் என சிறப்புற ஆரம்பமா  இந்நிகழ்வில் முதலில் கேலிச்சித்திர கலைஞர்  அஸ்வினின் ஊடக பயணம் குறித்த  “கோடுகளால் பேசியவன்’ எனும் காணொளி ஒன்று திரையிடப்பட்டது.

தொடர்ந்து இந்நிகழ்விற்கான தனது ஆசியுரையினை அனுப்பி வைத்த வடமாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரின் ஆசியுரை தொகுப்பாளர் சத்தியமூர்த்தி சதீசனினால் வாசிக்கப்பட்டது.

பின்னர் சிறப்புரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் Paul Scully,  ‘காட்டூன்களிற்கு மொழி அவசியம் இல்லை’ என்ற அஸ்வினின் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் அவரின் காணொளியில் காண்பிக்க பட்ட அவரது காட்டூன்கள் குறித்த தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ‘கோடுகளால் பேசியவன்’ நூலினை   நாடாளுமன்ற உறுப்பினர் அறிமுகம் செய்து வைக்க பிரதம விருந்தினர் ஆனந்தி சூரிய பிரகாசம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஆய்வுரையாற்றிய சிறப்பு விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர்  இளையதம்பி தயானந்தன், ஊடகவியலாளர் அஸ்வின் தனது படைப்புக்களில் மொழியை ஒரு பிரதானமாக கொள்ளவில்லை. ஆனால் அவன் படைப்புகள் பேசுகின்றன என்பதை அவரது காட்டூன்கள் மட்டுமல்ல அவர் இயக்கிய வார்த்தைகள் ‘கண்ணே என் கண்ணே என்ற குறும் படம் ஒன்றும் காட்டி நிற்கின்றது’ என கூறினார்.

அறிமுக உரையாற்றிய பிரதம விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தி சூரிய பிரகாசம், அஸ்வின் காட்டூன்கள் மூலம் பேசவில்லை மாறாக கோவப்படுகிறான். சமூக அரசியல் சீர்கேடுகளில் அவனது கோபத்தை காட்டூன்களில் காட்டியுள்ளார் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களான சகோதர மொழி சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்டன பண்டார மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவகுரு பிரேமானந்தன் ஆகிய இருவரும் உண்மையாக உழைக்கும் ஊடகவியலாளர்களை துரத்தும் சவால்கள் குறித்து பேசினர்.

இறுதியாக காட்டூனிஸ்ட் அஸ்வினின் சகோதரனும் ஊடகவியலாளருமான அல்வின் சுகிர்தன், அல்வினின் நினைவுகள் குறித்து உரையாறியதுடன் தொடர்ந்து  தமிழ் தகவல் நடுவதின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

நமது ஈழநாடு இணையத்தில் இருந்து..
ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை (July) பிரித்தனியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தமிழ் தகவல் நடுவம் (TIC) பெருமையுடன் பிரித்தானியாவில் அறிமுகம் செய்யும் இந்நிகழ்வு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP கலந்து கொள்ளவுளதுடன் சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலர் பங்கேற்கவுள்ளனர். தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்தி தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக உள்ளன. இந்நிலையில் அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தீர்க்கதரிசன ஓவியன் அஸ்வினின் காட்டூன்களை ஆவணப்படுத்தி ஊடக நண்பர்களால் இலங்கையில் வெளியிடப்பட்ட நூலினை தமிழ் தகவல் நடுவமும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையில் குறித்த கலை மேலும் வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த மக்களிடையே ஒரு புரிந்துணர்வையும் கருத்துப் பரிமாறலையும் கொண்டு வருவதற்கு கேலிச்சித்திரங்கள் முக்கிய கருவியாக இயங்க முடியும் என தமிழ் தகவல் நடுவம் நம்புகிறது. 
Share:

No comments:

Post a Comment