மாதகல் சம்பில்த்துறை புனித சூசையப்பர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு..!

மாதகல் சம்பில்த்துறை புனித சூசையப்பர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு புனிதரின் திருச்சுரூபம் மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்திலிருந்து திருச்செபமாலையுடன் அலங்கரிக்கப்பட்ட படகில் புனிதரின் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, அருட்தந்தை கெலன் அடிகளார் தலைமையில் திருப்பலியும் நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.
திருவிழாத்திருப்பலியினை அருட்தந்தை ஞானேந்திரன் அடிகளார் தலைமையில் மண்ணின் மைந்தன் அருட்தந்தை பேடின் ஜெனந் அடிகளாரும் இணைந்து ஒப்புக் கொடுத்து செபித்தார்கள். இறுதியில் புனிதரின் திருச்சுரூப ஆசிரும், அதனைத் தொடர்ந்து கடல் மற்று தொழில்களும் ஆசிர்வதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் புனிதரின் திருநாள் நல்வாழ்த்துக்கள்


Share:

No comments:

Post a Comment