மாதகல் விநாயகர் விளையாட்டு கழகத்தினால் முன்னாள் அதிபர் அமரா் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் கல்வியங்காடு GPS அணியினர் வீரா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்..!

01.05.2018 அன்று  வீரா மென்பந்து இறுதிப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.அதிலே கல்வியங்காடு GPS அணியினர் வீரா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுக்கு  விநாயகர் விளையாட்டு கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த விருந்தினர்கள், வெளிநாட்டு விநாயகர் ஆதரவாளர்கள்,கழக அங்கத்தவர்கள மற்றும் மாதகல் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் திரு.வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் இன்று 24.03.2018 காலை இனிதே ஆரம்பமானது. திருமதி. கிருஸ்ணராஜா தவஈஸ்வரிதேவி அவர்களினால் மங்கள விளக்கேற்றத்தினை தொடர்ந்து ஆரம்பமாகிய இந் நிகழ்வு குழுA பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றது. இச் சுற்றில் சங்கானை Y.M.H.A அணி வெற்றி பெற்றது..


Share:

No comments:

Post a Comment