மாதகல் நுணசை காவடி கந்தன் வருடாந்த தீர்த்தத்திருவிழா உற்சவ நிகழ்வுகள்...!

மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி கோவில் விளம்பி வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம்..!

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே...
கந்தனுண்டு கவலையில்லை மனமே...
உன் விந்தை கண்டு வியக்கிறேன் முருகா..
அடியவர் பதம் சுடும் எனக் கண்டோ
சுட்டெரியும் சூரியனை விழி நீர் சிந்த வைத்தாய்......
வாளும் வெட்டவில்லை...
தீயும் சுட்டதில்லை...
உன் அருளா முருகா.....
பச்சிளம் பிள்ளை முதல் பல்லில்லா முதியவரின் வரை உன் காவடி தூக்க வைத்தாயே முருகா....
அடியவரை மகிழ்வித்து
துயில் கொள்ளும் நீ எமக்கு
குறும்புக்கார குமரனய்யா...
காலமெல்லாம் உன் அருள் வேண்டுமையா....{Thusa PS]

28.04.2018இன்றைய தினம் காலை 10:00 மணியளவில் கிரிகைகள் பின்னர் வசந்த பூசைகள் ஆரம்பமாகி முருகப்பெருமான் வள்ளிதெய்வானயுடன் உள்வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடி தேரில் வலம் வந்தார்.
இத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காவடிகள் பத்தர்களால் எடுக்கபட்டதுடன் ஆலயத்தில் பெரும் திரளான மக்கள் பக்தியுடன் பங்கு பற்றினார்கள்.


Share:

No comments:

Post a Comment