விநாயகர் விளையாட்டுக் கழக மைதான கொள்வனவிற்காக பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கமானது லண்டன் வாழ் மக்களிடம் இருந்து..!

பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கமானது லண்டன் வாழ் மக்களிடம் இருந்து நிதி உதவியாக ஆறு லட்சத்து பத்தாயிரம் (610,000/=) ரூபாவினை எமது கழக மைதான கொள்வனவிற்காக விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கியுள்ளது. அதில் நான்கு லட்ச ரூபாவினை(400,000/=) பிரித்தானியா வாழ் மக்களிடம் இருந்தும் மற்றும் லண்டனில் வசித்து வரும் விநாயகர் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினரான மகேந்திரம் தபேஸ்கரன் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இரண்டு லட்சத்து பத்தாயிரம்(210,000) ரூபாவினையும் விநாயகர் விளையாட்டுக் கழக மைதான கொள்வனவிற்காக வழங்கியுள்ளனர்.இவ் நிதி உதவியினை வழங்கிய லண்டன் வாழ் மாதகல் மக்களிற்கும் மற்றும் மகேந்திரம் தபேஸ்கரன் அவர்களிற்கும் விநாயகர் விளையாட்டுக்கழகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது. இனி வரும் காலங்களிலும் விநாயகர் விளையாட்டுக் கழக வளர்ச்சிக்கும் மாதகல் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் உங்கள் செயற்பாடுகள் தொடர வேண்டும் என உங்களிடம் பணிவன்புடன் கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment