மாதகல், ‎பண்டத்தரிப்பு, சில்லாலை பகுதிகளில் 4வது நாளாக மழை நீடிப்பு…!

இளமங்கையவள் கூந்தல் என கரியவானம் மழைமாரி சொரிய….
தவளைகள் தவில் இசைக்க…
சில்லென்று தென்றல் வீச…
நீர்கண்ட மரம்செடிகள் மகிழ்ந்தாட…
உயிர்கள் எல்லாம் உவகையுற்று களிக்க…
யாசகன் போல் நின்ற வானம் பார்த்த வயல்கள் கனிவுற…
பசும்மாதகல் வயலெலாம் வெள்ளமாகியதே…


விவசாயிகள் தம் பயிர்கள் செழித்து வளர காரணமாக இருக்கும் மழை தினம்தினம் நன்றாக பெய்ய வேண்டுமென இறைவனை வழிபடுகின்றனர்.
அதேபோல் 27/10/2017 அன்று பண்டத்தரிப்பு,சில்லாலை, மாதகல் பகுதிகள் எங்கும் மழை நன்றாக பொழிந்தது. வெகு நாட்களின் பின் மழை வருகை கண்டு ஆரம்ப நிலையிலிருக்கும் நெற் பயிர்களும், விவசாயிகளும் மிகவும் ஆனந்தமாக இருந்தனர். விவசாயிகள் தம் வேண்டுதலை இறைவன் ஏற்று கருணை காட்டியமைக்கு நன்றி செலுத்திய வண்ணமுள்ளனர்.
இதேபோன்று, மழை அடிக்கடி பொழிந்து எம் விவசாயத்தை அழியா வண்ணம் காக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம்….
Share:

No comments:

Post a Comment