சரித்திரப் புகழ்பெற்ற காவடிகந்தன் என்று போற்றப்படும் மாதகல் நுணசை முருகமூர்த்தி மீது பாடப்பெற்ற பத்திப்பாமாலை “காவடிக்கந்தா போற்றி” இசை வெளியிடும், கந்தசஷ்டி சூரன் போர் உற்சவ நிகழ்வுகளும்…!

மாதகல் நுணசை பதியுறை முருகமூர்த்தி ஆலயத்தில்….. 2017 .10.25 புதன்கிழமை மாலை காவடிக்கந்தா போற்றி எனும் இசை வெளியீடும்..
இவ்விசைத்தட்டை ஆலய தர்மகர்த்தா பாலசுப்ரமணியம் புருஷோத்தமன் அவர்கள் தயாரிப்பில்
ஈழத்து கவிஞர் சிவானந்தன் றஜித் அழகு தமிழால் அழகன் முருகனின் அற்புதங்களை எழுதி வார்க்க ஈழத்து இசை இளவரசர் அருணா கேதீஸ் அவர்களின் அற்புதமான இசையில் மெருகூட்டிட தங்கள் தேன்சிந்தும் குரலால் பாடல்கள் பாடி உயிர் கொடுத்துள்ள நம் பாடகர்களான
நாதஸ்வர வித்துவான் பஞ்ச மூர்த்தி குமரன். .
அருள் விக்னேஸ்வரன். .
மதுஸ்ரீ, மதுஷிகன், ஜெகனி, சுலக்சன் ஆகியோர் பாடிய இசைத்தட்டு காவடிகந்தா போற்றி எனும் நாமம் கொண்டு பக்தி பாமாலை யாக உருவாக்கியுள்ளார்கள். இசை வெளியீடு ஒருங்கமைப்பை ஆலய பிரதம குருக்கள் துஷ்யந்த குருக்கள் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இவ்விசை வெளியீட்டில் முருகப்பெருமான் மெய்யடியார்கள் யாவரும் வந்து இசைத்தட்டை பெற்று இசை இன்பத்தில் மூழ்கி அவனருள் பெற்று கொள்ளவும்.


Share:

No comments:

Post a Comment