மாதகல் மண்ணின் ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஓராண்டு நினைவு நிகழ்வும் அவரது நினைவுகளைத் தாங்கிய “கோடுகளால் பேசியவன்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும்…!

அரசியல் அரங்கிலும் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தீர்க்கதரிசனம் பேசிநிற்கும் ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை உள்ளடக்கிய ‘கோடுகளால் பேசியவன்’ என்ற ஆவண நூல் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.  யாழ். ஹம்சியா மஹால் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் ஓராண்டு நினைவுநாள் நிகழ்வினிலேயே மேற்படி ‘கோடுகளால் பேசியவன்’ என்ற ஆவணப்பதிவு நூல் வெளியிடப்பட்டது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பிரதி அதிபர் திரு.ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்  ||’ஊடகவியலாளர் அஸ்வினின் பன்முக ஆளுமைகள்’ – வேதநாயகம் தபேந்திரன்  ||’மாதகல் மண்ணின் மைந்தனாக அஸ்வின்’ – திரு.ஜேசுதாசன் அனுஸ்டதாஸ் (ஆசிரியர் யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி)  ||’ஓவியனாக கருத்தோவியனாக அஸ்வின்’ – திரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (உதவி ஆசிரியர் யாழ்.தினக்குரல்)  ||’நண்பர்களின் பார்வையில் அஸ்வின்’ – திரு. விவேகானந்தன் கவிச்செல்வன் (உத்தியோகத்தர் காங்கேசன்துறை புகையிரத நிலையம்)  ||’செய்தி ஆசிரியனாக பத்தி எழுத்தாளராக அஸ்வின்’ – எஸ்.ரி. குமரன் (ஆசிரியர் யாழ். மத்திய கல்லூரி) ஆகியோர் உரையாறினர்.  அதேவேளை பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி றொஷான் அடிகளார், யாழ் ஊடக அமைய அமைப்பாளரும் மூத்த ஊடகவியலாருமான இரத்தினம் தயாபரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வேல்தஞ்சன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றியிருந்தனர். மேலும் அஸ்வினின் வாழ்க்கை பயணத்தை விபரிக்கும் சிறப்பு விபரணப்படம் ஒளிபரப்பப்பட்டதுடன் அரது காட்டூன்களின் தொகுப்பை உள்ளடக்கிய ‘கோடுகளால் பேசியவன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.  தொகுப்பாசிரியர் வேதநாயகம் திபேந்திரனால் நூல் வெளியடப்பட அஸ்வினின் பெற்றோர் மற்றும் மகள் லோஜனா இணைந்து பெற்றுக்கொண்டனர். மூத்த, இளம் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மற்றும் அஸ்வினின் நண்பர்கள் உறவினர்கள் என அரங்கு நிறைந்த நூற்றுக்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..!


Share:

No comments:

Post a Comment