கனடாவைச்சேர்ந்த “உதவும் உறவுகள்”தங்களது பாசத்துக்குரிய உறவான, இறைபதமடைந்த யாழ். மாதகலைப்பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. செல்வரத்தினம் விஜயகுமாரி அவர்களின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு வட, கிழக்கில் வேறுபட்ட உதவிகளை புரிந்துள்ளார்கள்…!

வடகிழக்கில் இரு இல்லங்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்குமாக எழுபதாயிரம் ரூபா (70.000) நிதியுதவி வழங்கப்பட்டது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற, மற்றும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் சிறார்களை பராமரித்து, கல்வி புகட்டிவரும் “வித்யஜோதி ஆண்கள் இல்ல” சிறார்களுக்கு இன்றைய நாளில் விசேட உணவினை வழங்கிவைப்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளனர். தமது துயரத்திலும் மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற இவ் உயரிய உள்ளத்தவர்களை நாம் மனதார பாராட்டுகின்றோம். மேலும் இறைபதம் அடைந்த தம் உறவின் ஆத்மா சாந்தி வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இவ் வேளையில் எங்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களையும், நன்றிக்கடிதத்தினையும் இணைக்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment