கனடா வாழ் மாதகல் மக்களும் கனடா விளையாட்டுக்கழகமும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனூடாக தாயக தமிழ் உறவுகளுக்கு நான்கு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள்...!

மாணவர்களின் கற்றலுக்கான உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன…

மேற்படி மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு 21.07.2017 மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் க.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கனடா நாட்டில் வாழும் தாயகத் தமிழ் உறவுகளான மாதகல் உறவுகள் வருடா வருடம் தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் நோக்குடன் கோடையின் கொடை என்னும் நிகழ்வினை நடத்தி வருகின்றது.


இதன் மூலம் கிடைக்கும் நிதியுதவிகளினூடாக தாயகப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான வாழ்வாதார உதவிகள், கற்றலுக்கான ஊக்குவிப்பு உதவிகள் என்பவற்றை வழங்கி வருகின்றனர்.
மாதகல் மக்களும் கனடா விளையாட்டுக் கழகமும் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நான்கு லட்சம் ரூபா பெறுமதியான இவ் உதவித்திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு பால் மாடுகளும், பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும், 16 பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும், பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவி ஒருவருக்கு 24000 (இருபத்து நாலாயிரம்) ரூபா பண உதவியும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்வின் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment