மாதகல் கிராம மக்களுடன் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதிகள் சந்திப்பு...!மாதகல் கிராம மாதர்சங்கம் மற்றும் முதியோர்சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் காங்கேசன்துறை தொகுதி இணைப்பாளர் ஜீவன் மற்றும் கோப்பாய் தொகுதி இணைப்பாளர் உதயன் ஆகியோர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் சங்கப்பிரதிநிதிகள் தங்கள் பிரதேச வெள்ளவாய்க்கால் வீதி பகுதியளவில் திருத்தவேண்டி உள்ளதாகவும் அதனை திருத்தி தருமாறு கோரிக்கை முன்வைத்ததுடன் வாழ்வாதார உதவியைபெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தொடர்ந்தும் வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு மாதகல் கிராமமக்கள் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்தனர்.

Share:

No comments:

Post a Comment