மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி சிறார்களின் தேவையறிந்து தாமாகவே முன்வந்து பார்வையிட்டு சிறார்களுக்கு தேவையான...!

விளையாட்டு உபகரணங்களை து.கிரிதரன்(அவுஸ்ரோலியா) அவர்கள் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு வழங்கினார். மற்றும் அருணகிரி( இத்தாலி) முன்பள்ளிக்கு பாவனைக்கு தேவையான பத்து பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் மேசை ஒன்றும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர்களுக்கு சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக் குழு ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள். மற்றும் இவ் முன்பள்ளியில் 33கும் மேற்பட்ட பிள்ளைகள் மற்றும் 3 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இப்படியொரு முன்பள்ளி அமைவதற்கு கனடாமாதகல் முன்னேற்றக் கழகம், கனடாமாதகல் நலன்புரிச்சங்கம், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மாதகல் மக்கள், மற்றும் மாதகல் மக்கள் ஆகியோரின் நிதியுதவியுடன் 2015ம் ஆண்டு முகாமைத்துவக் குழுவால் கட்டி முடிக்கப்பட்டது. 11/04/2015ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. உதவி செய்த கழகம், சங்கங்கள், மக்கள் மற்றும் முகாமைத்துவக்குழுவிற்கும் எமது நன்றிகள்.
Share:

No comments:

Post a Comment