அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கட்டி போட்டுள்ள இலங்கை தமிழர்…!

யாழ்.மாதகலைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமார் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடமாடும் வண்டியில் விதவிதமான தோசைகளை சுட்டு கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார்...

யாழ்.மாதகலைச் சேர்ந்தவரான கந்தசாமி திருக்குமார் கடந்த 2001ல் அமெரிக்காவுக்கு சென்று அங்கு சிறிய அளவிலான தோசை கடையை நியூயோர்க்கில் தொடங்கினார். விதவிதமான தோசைகளை சுவையாக வாடிக்கையாளர்களுக்கு திருக்குமார் சுட்டு கொடுக்க, பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களின் நாக்குகள் இவரது தோசைக்கு அடிமையாகி போனது. 

 மிகவும் குறைந்த விலையில் ருசியான உணவு வகைகளை கொடுப்பதால் இவர் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் வருவதால் திருக்குமார் கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய சைவ தோசை தள்ளுவண்டி கடை என்றால் அது திருக்குமாரின் கடை தான். மிகவும் தரமான உணவுகளை தயாரிக்கும் திருக்குமார் தோசை மட்டுமின்றி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கால் செய்யப்பட்ட சமோசாக்களையும் தயாரிக்கிறார். மேலும் குளிர்பானங்களையும் திருக்குமாரே தயாரித்து விற்கிறார். 

திருக்குமாரின் உணவு கடைகளுக்கு சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கிளைகள் உண்டு. கடந்த 2007ல் சாலையோரக் கடைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றதில் கிடைத்த பரிசு மற்றும் சான்றிதழ்களை தனது தள்ளுவண்டியில் வாடிக்கையாளர்கள் பார்க்கும் படி திருக்குமார் வைத்துள்ளார். பாண்டிச்சேரி மசால் கறி தோசை, தேங்காய் மற்றும் மிளகாய் பொடி தூவிய மலையாள தோசை ஆகியவை மிக இவர் கடையில் பிரபலமாகும். ஒரு தோசை 7 டொலருக்கு விற்கப்படுகிறது.


 இவர் பற்றிய செய்தி முதன்முதலாக கடந்த 2002ஆம் ஆண்டு நியூயோர்க் மேகசின் பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பின்னர், பிரபல அமெரிக்க பத்திரிகைகளிலும் திருக்குமார் குறித்த செய்திகள் வந்துள்ளன. இலங்கையில் டிராவல் ஏஜன்சி வைத்திருந்த திருக்குமார் முதன் முதலில் பணி நிமித்தமாக பாங்காக் செல்லும் போது ஒரு இடத்தில் சமையல் செய்துள்ளார். அதன் பிறகு பாங்காக் செல்லும் போதெல்லாம் சமையல் செய்து அதன் மூலம் அங்கு ஊதியமும் பெற்றுள்ளார்.தமிழ்வின் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

இவரின் முயற்சியையும், திறமையையும் நாமும் எம் மாதகல் மண் சார்பில் வாழ்த்துகிறோம்.[Watch] Meet Thiru Kumar, The Dosa Man From New York Who's Making Us Proud


Settled somewhere in the bustle of Washington Square Park in New York, Thiru Kumar flips dosas faster than you can blink an eye. Originally from Sri Lanka, Kumar has come to be known as the Dosa man, whose food is an absolute delight for foodies in and around Washington Park. 21sld9 Rediff Kumar has been serving the customers with the traditional South Indian food since 2001, and has also won an award for the best street food in NY. When asked why didn't he open a restaurant after being successful, Kumar said, " I like to deal with people. I don't like restaurants. If someone's buying food, I get to directly deal with them. In a restaurant, it's different. Somebody else takes the order. So I can't provide the customer what they need." 

Spend some time with Kumar here, as he talks about his journey so far, and what makes him a happy man:

Share:

No comments:

Post a Comment