மாதகலில் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்ரன் ஜோண்சன்…!

போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன இடமாக விளங்கும் மாதகல் கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சியின் குறித்த பகுதியின் நிர்வாக செயலாளருமான  அன்ரன் ஜோன்சன்  கோரிக்கை விடுத்துள்ளார்..

ஆது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – ‘இந்தியாவிலிருந்து மீன்பிடி வள்ளங்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் மாதகல் கடற்கரையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் தற்பொழுது குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

எனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்குடனும் போதைப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மாதகல் கடற்கரையில் நிரந்தரமான ஒரு பொலிஸ் காவலரண் அமைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்..

யாழ்முரசு இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன…..

Share:

No comments:

Post a Comment