மாதகல் சம்பில்த்துறை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மயானத்தில் தகனக்கிரிகைக்காக ஊர்வலமாகச் சென்றபோது கொளுத்திய பட்டாசுகள் வெடித்து…!

19/04/2017 சிவன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியின் ஓரங்களிலுள்ள பற்றைகள் தற்போது வீசும் தென்மேல் பருவக்காற்று, மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீப்பிடித்து காட்டுத்தீ போன்று பரவியது .மேலும் மயானத்தின் சுற்றாடலிலும் பட்டாசுகள் வெடித்து தீ பரவியது. அச்சமடைந்த மக்கள் உடனே யாழ் மாநகர தீயணைப்பு பிரிவினர்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் கடற்படையினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால் பதற்றமடைந்த மக்கள் எனிவருங்காலங்களில் இவ்வாறு வீதிகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்….
Share:

No comments:

Post a Comment