மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வில் அமரர் அஸ்வின் அவர்களுக்கு மாமனிதர் தராகி நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது...!

இவ்விருதினை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டார்கள். தேசப்பற்றுடனும் நேரிய சிந்தனையுடனும் அரசியல் தெளிவுடனும் பயணித்த அற்புதமான ஒரு கருத்தோவியக்கலைஞன் அஸ்வின். சாதிக்க வேண்டிய இளவயதில் அகாலமரணம் அடைந்த அமரரிற்கு , இம்முறை அறிமுகப்படுத்தப்படும் மாமனிதர் தராகி நினைவு விருதை முதன் முறையில் வழங்கி தனது கெளரவத்தை செலுத்துகிறது யாழ் ஊடக மையம். எமது மாதகல் மண் இவரது கௌரவிப்பினால் மிகவும் பெருமை அடைகிறது…. மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி நகரில் நடைபெறவுள்ளதுடன் தராகி சிவராம் ஞாபகார்த்த விருது மறைந்த கேலிச்சித்திரக் கலைஞரும் ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது. ஊடகவியலாளர் மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 12 ஆவது நினைவேந்தல் (29.04.2017) அன்று சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் நடைபெறவுள்ளது. யாழ். ஊடக அமையத்தலைவர் ஆ. சபேஸ்வரன் தலைமையில் பிற்பகல் 3.00 மணிக்கு கிளி. பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறும் மேற்படி நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வின் நினைவுரைகளாக ‘தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்’ எனும் தலைப்பில் யாழ். பல்கலை ஊடககற்கை இணப்பாளர் கலாநிதி எஸ். ரகுராம், ‘கூட்டமைப்பு உருவாக்கத்தில் சிவராம்’ எனும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ‘சிவராமின் கனவு’ எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ராதேயன் மற்றும் ‘நானும் சிவராமும்’ எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகர் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். இதேவேளை தமிழர் தாயகத்தில் துணிச்சலுடனும் ஊடக அறத்துடனும் செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் யாழ். ஊடக அமையம் இவ்வாண்டு முதல் வழங்கவுள்ள ‘தராகி சிவராம் ஞாபகார்த்த விருது’ மறைந்த கேலிச்சித்திரக் கலைஞரும் ஊடகவியலாளருமான ப.அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது. அத்துடன் வடக்கு கிழக்கில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருதுவழங்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.Share:

No comments:

Post a Comment