யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் வரலாறு…!

 சென் யோசப் மகா வித்தியாலயம் என்பது இலங்கையின், வட மாகாணத்தின், வலிகாமம் கல்வி வலயம் வலிகாமம் கல்வி வலயத்தில் மாதகல் என்ற ஊரில் அமைந்துள...

 சென் யோசப் மகா வித்தியாலயம் என்பது இலங்கையின், வட மாகாணத்தின், வலிகாமம் கல்வி வலயம் வலிகாமம் கல்வி வலயத்தில் மாதகல் என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அரசப் பாடசாலை ஆகும். இது 1C வகையைச் சேர்ந்த பாடசாலை ஆகும்.

சென் யோசப் மகா வித்தியாலயம் மாதகல்

அமைவிடம்:  மாதகல்,யாழ்ப்பாண மாவட்டம்
            
தகவல்
வகை:  அரசுப் பள்ளி
குறிக்கோள்:  புரிந்துணர்வுடன் வாழும் பண்பும் தன்னார்வமும் உயரிய கற்றல் தேர்ச்சியும் மிளிர செயற்படுவோம்.
தொடக்கம்: 1896
அதிபர்:  யோ.எட்வேட் பங்கிராஸ்
தரங்கள்:  மாணவர்கள்
நிறங்கள்:  மஞ்சள்,சிவப்பு

                                                          சென் யோசப் பாடசாலையின் முகத்தோற்றம்  

மாதகல் கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. இப் பாடசாலை பண்டத்தரிப்பு பிரதான வீதியின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. இப் பாடசலையின் வடக்கே புனித அந்தோனியார் ஆலயம் தெற்கே பானகவெட்டி அம்மன் கோவிலும் பாடசாலையின் பின் புறம் ஆஞ்ஞநேயர் கோவிலும் சூழ இறைவன் அருளொடும் அமையப்பெற்றுள்ளது.
வரலாறு

கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவுடன் மாதகல் புனித சூசையப்பர் பாடசாலை 1896 மார்ச் 25 இல் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் கோவிலுக்கு அருகாமையிலே வணக்கத்துக்குரிய வில்லியம் ஓவண் அடிக்கலரால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலம் அங்கு இயங்கிய பாடசாலை குஞ்சிப்பிள்ளை கந்தப்பர் அவர்களின் முயற்சியினால் மாதகல் புனித அந்தோனியார் ஆலய வளவில் அமைந்த தற்காலிகக் கட்டிடத்திற்கு 1904 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது .வணக்கத்துக்குரிய பு.சின்னப்பர் அடிகள் பாடசாலையின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தார். திரு.ளு.புஸ்தியாம்பிள்ளை அவர்களே ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியராவார். வண.பிதா.ளு.றொட்றிக்கோ தொடர்ந்து அதிபராக நியமனம் பெற்று பாடசாலையைத் திறம்பட நடத்தினார்கள்.
வளர்ச்சி

புனித சூசையப்பர் சபைத் துறவிகள் 1917 டிசம்பரில் பாடசாலையைக் கையேற்று தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்திற்கு மாற்றஞ்செய்தனர். மா,பலா,வாழை,முந்திரிகை முதலிய பழமரச்சோலை நடுவில் இப் பாடசாலையானது இரு மொழிப் பாடசாலையாக உருவெடுத்தது. 1918இல் 42 மாணவர்கள் ஆங்கில வகுப்பில் பயின்றார்கள். 1919 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்லூரியாகப் பதிவு செய்யப்பட்டது. 1912இல் ஆரம்ப ஆங்கில கல்லூரியாகவே கணிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்தது 1922இல் வண. பிதா.டெஸ்லாண்ட் இப் பாடசாலைத் துறவிகள் இருப்பதற்கு அழகான இல்லத்தை அமைத்து கொடுத்தார். ஊரவர்களின் உதவியுடன் நிரந்தரமான கட்டிடங்கள் அமைத்து பல வசதிகளுடன் பாடசாலை இயங்க ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் வணக்கத்துக்குரிய சகோதரர் ளு.பீலிக்ஸ் அவர்களே,வணக்கத்துக்குரிய சகோதரர் ளு.அலோசியஸ் (1925-1927) அவர்கள் அதிபராகி பாடசாலை ஆங்கில மொழிக் கல்வியில் முன்னேற அரும்பணி ஆற்றினார்கள்.
அதிபர்களின் செயற்பாடுகள்

1923 ஆம் ஆண்டளவில் புனித சூசையப்பர் சபைத் துறவிகளிடமிருந்து யாழ்.கத்தோலிக்க திருச்சபையினர் பாடசாலையை மீண்டும் பொறுப்பெடுத்து நடாத்தினர். 1927இல் வணக்கத்துக்குரிய P.நீக்கிலஸ் அடிகள் அதிபராகப் பதவியேற்றதும் மாணவர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்தது. வடமாநிலத்தின் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் தமிழ் ஆயராக நியமனம் பெற்ற மகா வந்தனைக்குரிய ஜெறோம் எமிலியானுஸ்ப்பிள்ளை (டீ.ளுஉ) ஆண்டகை அவர்கள் 01.07.1932 முதல் 31.10.1934 வரை அதிபராகக் கடமை புரிந்து பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார்கள் 01.11.1934 முதல் 30.11.1945 வரை வணக்கத்துக்குரிய யேசுதாசன் அடிகளார் அவர்கள் அதிபராக இருந்தார் . திரு N.ஜேம்ஸ் அவர்கள் 1939 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக 1945-1966 வரை பணிபுரிந்தார்.1951 இல் இப்பாடசாலையானது மாதகல் சென்.யோசவ் ஆங்கிலப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1961 இல் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு 1967 இல் மாதகல் சென் யோசவ் மஹா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றஞ் செய்யப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகள் இப்பாடசாலையில் கடமையாற்றி இப் பாடசாலை வட பகுதியில் ஒரு சிறந்த ஆங்கிலக் கல்வி நிலையமாக்கி பெருமை திரு N.ஜேம்ஸ் து.P அவர்களையே சாரும். திரு எட்வேர்ட் நவரத்தினசிங்கம் அவர்கள் 1967 இல் பதவியேற்றார். அவர் தமது குறுகிய காலத்தில் பொதுமக்கள்,பழைய மாணவர்களிடம் பணம் சேகரித்து ஆறு வகுப்புகள் இயங்கக்கூடிய மண்டபம்,காரியாலயம்,அரங்கு ஆகியவற்றைக் கட்டி மாணவர் தொகையுடன் கல்வித்தரத்தையும் பெருக்கினார்.இதுவரை காலமும் தரம் 4 இலிருந்து க.பொ.த. சாதாரண தரம் வரை ஆண்கள் மட்டுமே கற்ற இப் பாடசாலையில் பாலர் வகுப்பு தொடக்கம் தரம் 3 வரையான வகுப்புக்களும்ஆரம்பிக்கப்பட்டதுடன் சகல வகுப்புகளிலும் பெண் பிள்ளைகளும் கற்க வசதியளிக்கப்பட்டது. 01.07.1968 -09.09.1970 வரை திரு ளு குமரவேல் 10.09.1970 -20.03.1973 வரை திரு.ஆ.சிவராசரத்தினம் அவர்களும் அதிபர்களாகப் பணியாற்றினார்.1970 இல் விஞ்ஞானப் பாடங்கள் அறிமுகப்படுத்தபட்டத்துடன் 1971 இல் அயலவரும் நண்பருமாகிய அமரர் ளு இராமநாதன் அவர்களின் உதவியால் விஞ்ஞான உபகரணங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படடன.21.03.1973 இல் அதிபராக திரு ளு ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் கடமையேற்றார்.இவரது பணிக்காலம் 1977 இல் நிறைவடைந்தது. திரு.ஆ.சிவராசரத்தினம் அவர்கள் மீண்டும் ஐந்து ஆண்டுகள் (29.01.1978 – 14.03.1983)இங்கு அதிபராக கடமையாற்றிய போது வருடந்தோறும் பாடசாலைத் தினத்தையொட்டி இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. இப் பாடசாலையில் கல்வி கற்ற பலர் பொறியியலாளர்களாகவும் வைத்தியர்களாகவும் அரசாங்க நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணிபுரிகிறார்கள்.அயற் கிராமங்களாகிய சில்லாலை,பண்டத்தரிப்பு,இளவாலை முதலிய இடங்களிலிருந்தும் மாணவர்கள் இப்பாடசாலையிற் சேர்ந்து ஆங்கிலம் பயின்று வாழ்க்கையில் முன்னேற்றமடைந்துள்ளார்கள். 15.03.1983 இலிருந்து 1988 வரை திரு.அ.தம்பிப்பிள்ளை அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று சிறப்பாக நடாத்தி வந்தார்.


     அதிபர்கள்   

 1. வண அருட்திரு. உவிலியம் 1986.3.25 (ஆரம்பம்)

 2. குஞ்சிப்பிள்ளை கந்தப்பர் 1896-1904

 3. வண அருட்திரு. ஜி.சின்னப்பர் 1904-1910

 4. வண அருட்திரு. ளு.ரொட்டிக்கோ 1910-1922

 5. வண அருட்திரு. டெஸ்லாண்ட் 1922-1925

 6. வண சகோ. ளு. அவோசியஸ் 1925-1927

 7. வண அருட்திரு. பி. நிக்கிலஸ் 1927-1932

 8. ஆண்டகை P.ளு.ஊ எமிலியானஸ்பிள்ளை 1932-1934

 9. வண அருட்திரு யேசுதாசன் 1934-1945

 10. திரு N. ஜேம்ஸ் 1945-1966

 11. திரு ஊ.று நவரத்தினசிங்கம் 1966-1968

 12. திரு ளு. குமாரவேல் 1968-1970

 13. திரு மு.சிவராசரத்தினம் 1970- 1973

 14. திரு ளு. ஆனந்தகுமாரசாமி 1973- 1977

 15. திரு. மு.சிவராசரத்தினம் 1977- 1983

 16. திரு. அ.தம்பிபிள்ளை 1983- 1988

 17. திரு. அருட்சுப்பிரமணியம் 1988-1990

 18. திரு. வி.சிற்றம்பலம் 1991-1995

 19. திரு. கா.அழகரத்தினம் 1996-2002

 20. திரு.வி. சுப்பிரமணியம் 2002-2007

 21. திரு. வி. நடராசா 2007-2013

 22. திரு.செ.ஈஸ்வரன் (பிரதி அதிபர் ) 2013-2014

 23. திரு. யோ.எட்வேட் பங்கிராஸ் 2014


                         பாடசாலைக் கீதம்   

சீரோங்கும் மாதகலின் னலைச் செல்வமே – ஞானத்
தேனை அள்ளி ஊற்றுகின்ற ஜீவமலரே

பாரோங்கும் நாட்டினுக்கும் பண்பமைந்த வீட்டினுக்கும்
நேரோங்க நீ வளர்ந்தாய் நெஞ்சினிலே ஆலயமே

முத்திதரும் போதகங்கள் அத்தனையும் – காட்டினாய்
முடிவில் அமுதளிக்கும் கல்வியையும் – ஊட்டினாய்
நித்தப்பயன் அளித்து தீயகுணம் – போக்கினாய்
நேர்மை ஒழுக்கம் நீதி ஒற்றுமையை – ஆக்கினாய்

சித்தம் தெளியும் நல்ல தீந்தமிழின் – ஆற்றிலே
தேசம் புகழும் நல்ல ஆசிரியர் – ஊற்றிலே
சுத்தம் அமைச்சல் எனும் நற்குணத்தின் – சாற்றிலே
தூய்மையடைந்தோம் சென்சூசைமுனிக் – காற்றிலே


                     சாதனைகள்   

1.தேசிய மட்டம் 2016 1.யேசுதாஸ் அலெக்ஸ் றொகிப்பிரகான் 19வயது ஆண் பங்கு பற்றல்

மாகானமட்டம் 2016 1.யேசுதாஸ் அலெக்ஸ் றொகிப்பிரகான் 19 வயது ஆண் நான்காமிடம் தேசிய மட்டம் 2015 1.மகளிர் உதைப்பந்தாட்டம் பங்கு பற்றுதல் மாகனமட்டம் 2015 1.பெண்கள் உதைபந்தாட்டம் இரண்டாமிடம்

2.யெ.ஆன்யசிந்தா 19 வயது 400 மீ ற்றர் தடைதாண்டல் முதலாம் இடம்

110 மீற்றர் தடைதாண்டல் ஐந்தாமிடம் 200 மீற்றர் நான்காமிடம்

3.எஸ்.திசான் 19 வயது ஆண் 110 மீற்றர் தடைதாண்டல் ஐந்தாமிடம்
4.19 வயது பெண் அஞ்சல்

4×100 மீற்றர் மூன்றாமிடம் 4×400 மீற்றர் நான்காமிடம்


விக்கிப்பீடியாவில் இருந்து

COMMENTS

Name

Aiyyanaar Kovil,3,Anjaneyar Temple,8,Arasade SithiVinayagar,25,Articles,62,BharathiSanasamuka.N,3,Canada,59,Canada.M.n.m.o,28,Denmark,15,F.M.P.ThomaiyarOnriyam,9,fr.stjoseph sports,6,France,94,Gandhiji.P.School,6,GanthigySanasamuka.N,7,Hindu Samaiya A.s,8,History,47,Hospitel,9,Ilaignar Sanasamuka.N,34,jana,39,Kalagam,10,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,3,Kali Amman,7,Kalvi ApiViruthi.S,32,Kanchipuram Vairavar,10,Labale,12,LiveTv,141,London,20,Lurthu Maatha Kevi,19,mathagal,411,Mathagal NalanPuri.S,33,Mylvagna Pulavar.S.N,11,Navalar Sansmuka.N,9,Neer pavanaiyalar.S,10,Net,32,Nunasai Murugan,39,Nunasai Murugan.S.N,1,Nunasai.V,43,obituaries,488,Paanavaddy Amman,37,Punita Thomaiyar.S.N,1,Raja Rajeshwary,16,S.k.k Gnanavairavar,4,S.Maathar Kirama.A.S,17,Sahayapuram,17,Sampunatha Eswaram,10,Sangamiththa Temple,15,Sithi Vinayagar.P.S,51,Sivan Kovil,37,St Soosaiyappar.C,6,St Thomas.Y.Sports.C,13,St.Antonys Church,7,St.Joseph,82,St.Sebastians Church,18,St.Thomas Church,35,St.Thomas.P.School,10,St.Thomas.R.C.G,33,Steel players.S.C,3,StJoseph SportsClub,6,Swiss,39,ThamilPoonka,46,Upputtharavai Vairavar,2,Uthayatharagai.p,2,Vanni Vinayakar,6,Veerapathirar,6,Vigneswara,93,VinayagarSportsClub,31,VipulanantharPadippakam,5,wishes,251,
ltr
item
மாதகல்.Net: யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் வரலாறு…!
யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் வரலாறு…!
https://3.bp.blogspot.com/-p0xBUDm9oTU/WjAlp5iJneI/AAAAAAAALLc/UE0noVFTxp0mmTckbswlGtu708cZoMDeACK4BGAYYCw/s400/Mathagal-StJoseph-Maha-Vidyalayam-1.png
https://3.bp.blogspot.com/-p0xBUDm9oTU/WjAlp5iJneI/AAAAAAAALLc/UE0noVFTxp0mmTckbswlGtu708cZoMDeACK4BGAYYCw/s72-c/Mathagal-StJoseph-Maha-Vidyalayam-1.png
மாதகல்.Net
http://www.mathagal.net/2017/02/st-joseph-43.html
http://www.mathagal.net/
http://www.mathagal.net/
http://www.mathagal.net/2017/02/st-joseph-43.html
true
2878532765923976682
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy