மாதகல் வன்னித்தம்பி கந்தசுவாமி (மாதகல் வ. கந்தசாமி & சீனாக் கந்தசாமி சீன வானொலி தமிழ் ஆசிரியர்) பற்றிய ஒரு பார்வை…!


 அமரர்.வன்னித்தம்பி கந்தசுவாமி அவர்களின் நினைவுப் பூக்கள்…


 


2013-சீன வானொலி தமிழ்ப் பிரிவின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பேராசிரியர் திரு.சுந்தரம் அவர்கள் மாதகல் ஆசிரியர் திரு. கந்தசாமி அவர்களைப்பற்றி ஒரு சொற்பொழிவு நடத்தினார்.(காணோளி)..


சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் துவங்கியது.

பேராசிரியர் திரு.சுந்தரம்
2013-08-03

ஒலிபரப்புக்கான அறிவிப்பாளரையும், மொழிபெயர்ப்பாளரையும்

பயிற்றுவிக்கும் பணியை வலுப்படுத்தும் பொருட்டு, பின்னர், பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரியிலிருந்து மேலும் சில மாணவமாணவிகள் தமிழ்ப் பிரிவின் தலைவராகம் இருந்த தோழர் வாங் பாவ்ஷு, பிரபல தமிழ் அறிவிப்பாளர் ஹலுமினா என்னும் செங் ருய்ஃபாங் அம்மையார், முன்னாள் தமிழ்ப் பிரிவு துணைத் தலைவரான ட.தேவி என்னும் சென் ஜிஃபாங் அம்மையார், மூத்த மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் சென் ஜின்சிங் அம்மையார், முதலியோரும் இடம் பெற்றனர்.

மாணவர்களாகிய நாங்கள், நாள்தோறும் மொழிபெயர்ப்புப் பயிற்சியிலும், செய்தி மற்றும் சிறப்புக் கட்டுரை வாசிப்புப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தோம். இலங்கையைச் சேர்ந்த நிபுணர் மாதகல் கந்தசாமி அவர்கள், தமிழ் ஒலிபரப்புப் பயிற்சிப் பணிக்கு வழிகாட்டினார். தாடி மீசை நிபுணர் எனப் பெயர்பெற்ற கந்தசாமி அவர்களை ஆசிரியரி என்று நாம் அனைவரும் அழைப்பது வழக்கம். 

அவர் எங்கள் மொழிபெயர்ப்பையும் உச்சரிப்பையும் திருத்தி வந்தார். ஆசிரியர் கந்தசாமி அவர்களின் உதவியின்றி, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, முறைப்படி தொடங்கியிருக்க முடியாது என்று கூறினால் மிகையாகாது.

அறை ஆண்டு கடும் முயற்சிக்குப்பின், 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள், சீன மக்கள் குடியரசின் தமிழ் ஒலிபரப்பு, அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

தொடக்கக் காலத்தில் பல இன்னல்களுக்கு இடையே ஒலிபரப்புப் பணியில் ஈடுபட்டு வந்தோம். அப்போது மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாத தமிழ் அகராதிகள் எங்களுக்கு இல்லை. படிப்பதற்குத் தமிழ் நூல்களும் செய்தித் தாள்களும் இல்லை.

மற்றபடி, தமிழ் மொழி தட்டச்சுப் பொறிகளும் இல்லை. எல்லா செய்திகளும் சிறப்புக் கட்டுரைகளும் எங்கள் கைகளாலேயே எழுதப்பட்டன. கடின வேலை தான்.

அப்போழுது, நாங்கள் ஒலிப்பதிவு அறைக்குச் செல்வதற்கு முன், செய்திகள் என்றாலும் சரி,

சிறப்புக் கட்டுரைகள் என்றாலும் சரி, ஆசிரியர் மாதகல் கந்தசாமி அவர்களிடம் சென்று, அவற்றை வாசிப்பது வழக்கம். வாசிப்பில் பிழைகள் இருவ்தால், அவர் உடனே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்வார். எங்கள் உச்சரிப்பைச் சரிப்படுத்தி வாசிக்கக் காடடுவார். ஒரு கட்டுரையைக் குறைந்தது 5.6 முறையாவது ஒலிப்பதிவு செய்ய வேண்டும். அதாவது ஆசிரியர், எங்கள் ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு, மனநிறைவு அடையும் உரைதான், அது ஒலிபரப்ப அனுமதிக்கப்படும்.


மேலும், ஆசிரியர் கந்தசாமி, எங்களது தமிழாக்கத்தைச் சிவப்புப் பேனாவால் திருத்துவார். திருத்தி முடிந்த பின்னர், தமிழாக்கத் தாள்களில் ஒரே சிவப்பு மயம் காணப்படும். அவற்றைப் பார்ப்பதற்கு மிகவும் வெட்கப்பட்டோம். எனினும், அந்தச் சிவப்புமயத் தாள்களை மூத்த தலைமுறைப் பணியாளர்களாகிய நாங்கள் கசிக்கிக் கொண்டு குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவில்லை. மாறாக, பக்கம் பக்கமாகத் திரட்டி, அவ்வப்போது ()(5)

வெளியே எடுத்துப் பார்த்து, எனது தவறு என்ன? ஏன் ஆசிரியர் இவ்வாறு திருத்தினார் என்று ஆய்வு செய்து வந்தோம். முயற்சி திருவினையாக்கும். படிப்படியாக, தமிழாக்கப் பணியிலும் பெரும் முன்னேற்றம் கண்டோம்.

சீனத் தமிழ் ஒலிபரப்பின் தொடக்கக் காலத்தில், நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவ்வப்போது, இந்தியாவிலிருந்து சில கடிதங்கள் வந்தால், ஏன் உங்கள் தமிழ் ஒலிபரப்பில் அதிக அளவில் வடமொழி் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நேயர்கள் குறை கூறுவார்கள்.

சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, நடைமுறைக்கு வந்தபின், தமிழ்ப் பிரிவிலும் புத்தம் புதிய நிலைமை காணப்பட்டுள்ளது.


சீன அரசு நட்புறவு விருது…

முதன்முதலில் இலங்கையிலிருந்து சென்ற தமிழாசிரியர் மாதகல், திரு.வ.கந்தசாமி பணியாற்றினார். அதன்பின்னர் இலங்கையிலிருந்து சீன வானொலியில் பணியாற்றவும், அயல்மொழிப் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புப் பணிபுரியவும், தமிழ் கற்பிப்பதற்காகவும் தமிழாசிரியர் திரு.கே.சனகன், திருமதி ராணி இரத்தினதேவி, திரு.வீ .சின்னத்தம்பி ஆகியோர் பணியாற்றினர்.

50 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வெளிநாட்டு நிபுணர்களாக, தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, பணி புரிந்துள்ளனர். சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள்,இலங்கையைச் சேர்ந்த‌ மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, தமிழகத்தைச் சேர்ந்த ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், அந்தோனி கிளிட்டஸ், தமிழன்பன், புஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோரடங்குவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மூன்று முறையாக ஏறக்குறைய 12 ஆண்டுகள் சீனத் தமிழ் வானொலியில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கிக் கெளரவித்தது.நேயர்களின் கருத்துக்கள்
2007-01-31

கலை: அடுத்து கனடாவைச் சேர்ந்த எஸ். சுப்பிரமணியன் எழுதிய் அகடிதம். கனடாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான இவர் கடந்த 40 வருடங்களாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பை கேட்டு வருவதாக எழுதியுள்ளார். மேலும் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் பயனுள்ள, தெளிவான, அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, சுற்றுச்சூழல் விடயங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன என்றும் இணையதளத்தினூடால செய்திகளை வாசிக்க வாய்ப்புள்ளது என்பது மகிழ்ச்சி என்றும் 1960களிலும், 70 களிலும் மாதகல கந்தசாமி, வீ, சின்னத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணியை மகிழ்ச்சியோடு நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சீன வானொலி சின்னத்தம்பி பார்வையில்

சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு என்றதும் எனக்கு முதலில் நினைவில் வருபவர் “சீனத் தம்பி” என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பாரதிநேசன் வீ. சின்னத்தம்பி.

அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாதகல் கந்தசாமி எனப் பிரபலமாக அறியப்பட்ட, மாதகல் என்னும் ஊரைச் சேர்ந்த, வன்னித்தம்பி கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார்.

 மாதகல் கந்தசாமி சிறந்த எழுத்தாளர். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவார். அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளர். அவரது பேச்சைக் கேட்க பெருமளவு மக்கள் கூடுவார்கள். இவர் சீனா சென்று பீக்கிங் வானொலி நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பாளராக கடமையாற்றி சிறந்த அறிவிப்பாளர் என்ற பெயரினையும் பெற்றார். இவர் சீனதேசத்து இளையோருக்கு தனது ஆங்கில மொழி புலமையைப் பயன்படுத்தி ஆங்கில மூலம் தமிழ்மொழியை கற்பித்து அவர்களை சீன தேசத்து தமிழ் ஒலிபரப்பாளர்களாக பயிற்றுவித்து மேம்படுத்தினார்.

மாதகல் கந்தசாமி தனது கடமைக்காலம் முடிவடைந்து இலங்கை திரும்பியதும், இலங்கை கம்யூனிச கட்சி (சீன பிரிவு) சின்னத்தம்பி அவர்களை தெரிவு செய்து சீனாவுக்கு அனுப்பியது. 1966-ஆம் ஆண்டு இவர் பீகிங் சென்றார்.


நட்புப் பாலம்

ஜெயா: சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள், மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், ஆன்றனி கிளிட்டஸ், தமிழன்பன், பூஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோர் ஆவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மூன்று முறையாக ஏற்க்குறைய 12 ஆண்டுகள் சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கியது.

சிவகாமி:வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன், சீனப் பணியாளர்களின் தமிழ் மொழி ஆற்றல் பெரிதும் மேம்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடிகாசலம், ராஜாராம், கிளிட்டஸ், தமிழன்பன் முதலியோர், சீனாவில் தங்கியிருந்த போது, ஓய்வு நேரத்தில், பல தலைமுறை திறமைசாலிகளுக்கு கற்பித்துள்ளனர்.

ஜெயா:அப்போதைய அவர்களது மாணவர்கள், இப்போது தமிழ்ப் பிரிவின் வரவேற்கப்படும் அறிவிப்பாளர்களாக விளங்குகின்றனர். அவர்கள் உணர்வுப்பூர்வமாகத் தயாரிக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பல நேயர்களால் பாராடப்படுகின்றன.

சிவகாமி:மேலும், தமிழ்ப் பிரிவை நீண்டகாலமாக ஆதரித்து வருகின்ற நேயர்கள், நமக்கு மாபெரும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஜெயா: முதலில் ஒரு முக்கியமான நேயரைக் குறிப்பிட வேண்டும். அவரை ஏறக்குறைய அனைத்து நேயர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆமாம், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவரான எஸ்.செல்வம் தான் அவர்.சீன வானொலி இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment