மாதகல் கிராம அபிவிருத்தி சங்க பொது மண்டபத்தில் இயலாமை உடையோர், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு…!

நம்மில் இன்று ”எத்தனையோ பேர்கள் பெயர்,
புகழுக்காக பெரிய விழாக்கள், வைபவங்களை பெரும் கோலாகலமாக” செய்கின்றோம்…
 
அங்கு அன்றைய தினம் நம்மால் வீணாக்கப்படும் உணவுகள் முதல் இன்னும் எத்தனையோ பொருட்கள் என நாம் கழிவுத் தொட்டியில் இட்டுச் செல்கின்றோம். அவ்வாறான பல்வகை விழாக்களாயினும், வைபவங்களையோ! அதாவது பிறந்ததினம், ஒருவரது 31ஆம் நாள் நினைவு, ஆண்டு நிறைவு, திருமணம் என இன்னும் எத்தனையோ அவ்வாறான நிகழ்விற்கு ஒதுக்கப்படும் மேலதிகமான செலவினத்தை ஓர் ஏழை வாழ்க்கைக்கு கொடுத்து உதவுவோமாயின் நம் மக்களின் வாழ்விலும் ஓர் உன்னதமான உயர்வு கிடைக்கும்.
நாம் ஒவ்வொரு மக்களும் எமது தேவைக்கு அதிகமாக எத்தனையோ செலவினங்களைச் செய்து வீண் விரயம் செய்கின்றோம். ஆனால் ”ஒருவேளை உணவிற்காகவும், குழந்தை ஒன்று பாலுக்காகவும் கஸ்ரப்படும்போது நம்மில் எத்தனையோ பேர் கட்டப்பட்ட கட்டடங்களையோ அழகாக உள்ள ஆலயங்களையோ இடித்துக் கட்டுவதிலும், பல வர்ணங்கள் பூசுதல், பெரும் கோயில் பால் அபிஷேகம், அன்னதானம் செய்வதிலும் கருசனை காட்டுவதில் எந்தப்பயனும் இல்லை”. இதனை உணர்ந்தவர்களாயின் எம்மக்கள் அனைவரும் ஒன்றுபட்டாலே எம்மால் முடிந்தவரை இங்கு உள்ள எத்தனையோ ஏழைகள் வாழ்வின் வழமான வாழ்க்கைக்கு வழிகாட்டலாம்.
ஒரு ஊரில் பத்தோடு பதினொருவதாக ஒரு ஆலயம் கட்டுவதற்குப் பதில் ”ஒரு பாடசாலை கட்டுதல் எப்படி நன்மை பயன் உள்ளதோ, அதேபோன்று அங்கோர் ஏழைக்கு உதவிடலும் கூட” பல ஆலயங்கள் கட்டுதலும், அபிஷேக அன்னதானம் செய்வதற்கும் சமனானது.
உண்மையான ஒரு சந்தோஷமும் திருப்தியும் உங்களுக்குக் கிடைப்பதோடு ”ஒரு ஏழை வாழ்வில் ஒரு சிறு புன்னகை” உங்களால் ஏற்படுத்தப்படும்போது அதுவே நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பல கோடிக்கணக்கில் செலவு செய்தும் கிடைக்காத பலனை கடவுளே உங்களுக்கு ஏழு ஜென்மத்திற்குமான புண்ணிய பலாபலனாக சகல சௌபாக்கியத்தையும் தருவார்.

பிரான்ஸ்சை சேர்ந்த திரு. திருமதி. சயந்தன் கஸ்தூரி தம்பதிகளின் புதல்வனான சயந்தன் அக்‌ஷயன் 2ம்ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு மதியபோசனம் அவர்களின் சிறிய தாயாகிய செல்வி. ந.மதிவதனி அவர்களின் முன்றலில் புதிய அவதாரநிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டது
22.01.2017 அன்று மாதகல் கிராம அபிவிருத்தி சங்க பொது மண்டபத்தில் இயலாமை உடையோர், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டது.
சிறுவனை பராமரித்து கொள்ள கட்டில் தேவை


மாதகலைச் சேர்ந்த மகேந்திரம் தனேஸ்வரன் என்ற சிறுவன் தனது சிறுவயதிலிருந்தே மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு எழுந்து தனது அன்றாட கடைமைகளைக்கூட செய்யமுடியாமல் உள்ளான்.


விவசாயத்தை ஆதாரமகக் கொண்டதும் 7 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டதுமான இவன் குடும்பத்தினர் இச் சிறுவனை பராமரித்து கொள்ள சௌகரியமான கட்டில் தேவைப்பாடு உள்ளதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.உதவ விரும்பும் கொடையாளிகள் எம்முடன் தொடர்புகொள்ளவும்.

Contact Us
Address: மெமோறியல் லேன்,
மானிப்பாய் வடக்கு , மானிப்பாய். யாழ்ப்பாணம்.இலங்கை.
Mobi:0094779037489/ 0094778574818
EMail:newavatharam@gmail.com

France

திரு திருமதி செந்தில்குமரன் கலைவாணி

0033605725916


பிரான்ஸ்சை சேர்ந்த திரு.திருமதி சயந்தன் கஸ்தூரி தம்பதிகளின் புதல்வன் செல்வன் அக்‌ஷயன் 2ம்ஆண்டு நினைவுதின அன்பளிப்பாக பால்மா, தானிய சத்துணவு பொதிவகைகள் புதிய அவர்களின் சிறிய தாயாகிய செல்வி. ந.மதிவதனி அவர்களால் புதிய அவதாரம் பன்முக சமூக சேவை நிலையத்தின் ஊடாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.22.01.2017 அன்று மாதகல் கிராம அபிவிருத்தி சங்க பொது மண்டபத்தில் பிறப்பில் இருந்து எழுந்த நடமாட முடியாத யதுர்சனா அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மாதகல் எனும் இடத்தில் புற்றுநோயால் பாதிப்புற்ற வயது முதிர்ந்த அம்மாவிற்கும் அவரது மகளிற்கும் 09-5-2016 அன்று 10000 ரூபா பெறுமதியான உலா் உணவு,மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிறுவனத்தின் ஸ்தாபகருடன் சேர்ந்துசெல்வி ஆரணி செல்வலிங்கம் அவா்கள் தனது அம்மம்மா அன்னம்மா அவா்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு எமது நிறுவனத்தூடாக வழங்கப்பட்டது. தனது கை ஒன்றினையும் போரில் இழந்துள்ளார். இருப்பினும் இவரது நிலைமையை கருத்தில் கொண்டு மேலதிக உதவிகளை வழங்கவிரும்பும் அன்புள்ளங்கள் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.

Contact Us
Address: மெமோறியல் லேன்,
மானிப்பாய் வடக்கு , மானிப்பாய். யாழ்ப்பாணம்.இலங்கை.
Mobi:0094779037489/ 0094778574818
EMail:newavatharam@gmail.com

France

திரு திருமதி செந்தில்குமரன் கலைவாணி

0033605725916
புதிய அவதாரம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment