ஈழத் தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் எம் மாதகல் கிராமத்தை பிறந்தகமாகக் கொண்டவரும், தற்போது பிரான்சிலுள்ள மொனாக்கோ (மொன்டிகாலோ) மன்னராட்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான முன்னணி வங்கியாளர் சிதம்பரப்பிள்ளை விக்கினேஸ்வரன் அவர்கள் மொனாக்கோ நாட்டில் அந்நாட்டு நிதி அமைச்சராலும் வங்கிச் சேவைகள் தலைவராலும் அதியுயர் விருதான தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்…!

03.12.2013ல் விருது வழங்கப்பட்டது..
இந்த நாட்டின் மிகப்பெரிய வங்கியான EKG வங்கியில் தொடர்ந்து 20 வருட காலமாக சிறப்பாகப் பணியாற்றி அதன் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். அவரின் சேவையைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டது.

மற்றும் இவர் மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயம் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவராகும்.
இவரின் பணியை எம் மாதகல் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.


இத் தகவல் எமது இணையத்தளத்திற்கு மிகவும் தாமதமாகவே கிடைக்கப்பெற்றது ஆதலால் தான் தற்போது எம் இணையத்தினூடாக பிரசுரிக்கப்படுகிறது.
வாசகர்கள் அனைவரும் தாமதத்தினை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்வின் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment