————————————-ஏழாவது அகவையில்—————————

 

 மாதகல்நெற் 26.11.2016 இன்று தமது ஏழாவது அகவையில் வெற்றியுடன் அடி எடுத்துவைக்கிறது என்பதில் நாம் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம். 

நேயர்கள் ஆகிய நீங்கள் எமக்கு ஆதரவு அளித்தபடியால்தான் பல தடங்கல்களைத்தாண்டி நம் வெற்றிப்பாதை தொடர்கிறது. 

இதேபோன்று எம் இணையத்தள வாசகர்களே உங்கள் ஊக்குவிப்பினையும், கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எப்போதும் எமக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நம் மண்ணின் பெருமை மங்காது இப்பாரினிலே மிளிர நாம் என்றென்றும் மாதகலார் அனைவருடனும் சேர்ந்து அயராது பாடுபடுவோம். 

நாம் கிளைகள் போல அங்காங்கே படர்ந்திருந்தாலும் நம் வேர் என்றும் 

எம் மாதகல் மண் என்பதை மறவாதே!

Share:

No comments:

Post a Comment