உன் தூரிகை மொழி இனி பேசிட மாட்டாதோ…?

2016-ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன்…

காதோரம் வந்தசெய்தி காதடைத்துப் போனதடா
கதி கலங்கி நிற்கின்றோம் பாவிகளாய் நாம் இங்கு
பேர் அறியா ஊர்தேடிவந்து காலன் உனைக் கவர்ந்தானே
மாதகல் தந்த மைந்தா – எங்கள்
மார்பு துடிக்குதடா
பார் புகழந்த உன் தூரிகை மொழி இனி பேசிட மாட்டாதோ?
அழுத்தமாய் உன் தூரிகைகள் பேசியதால்
வெளிநாடு ஓடிவிடு என்று
யாரும் உனக்கு அழுத்தமிட்டனரோ
தோழனே உன் ஆத்ம சாந்திக்காய்
இறைஞ்சுகிறோம்
கல்லாய்ப் போன கடவுளர்களிடம்
அ.ஜசிகரன்

Share:

No comments:

Post a Comment