யாழ் -மாதகல் தம்பகொலபடுன விகாரையில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு…!


மாதகல் – தம்பகொலபடுன விகாரையில் உள்ள உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

அந்த உண்டியலில் 1 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினத்தில் குறித்த விகாரையை சுற்றி திரிந்துள்ள சிறுவர்கள் சிலர் தொடர்பாக காவற்துறை சந்தேகித்ததுடன், அன்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பணத்துடன் சந்தேக நபர்களான அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள், 13 மற்றும் 14 வயதானவர்களுடன், அவர்கள் இளவாளை காவற்துறைக்கு அழைத்து வரப்பட்டு கடுமையாக எச்சரித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


hirunews இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment