யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் மீனவரின் வலையில் சிக்கியுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழி...
யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் மீனவரின் வலையில் சிக்கியுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
31/08/2016 அன்று (புதன்கிழமை) காலை மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, குறித்த இராட்சத மீன் சிக்கியுள்ளது. இவ்விடயம் கடற்படையினரால் கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினர் மீனை பெற்றுக்கொண்டதோடு, அங்கேயே அதனை வெட்டி புதைத்துள்ளனர். குறித்த மீன் 100 கிலோவிற்கும் அதிகமான எடையைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS