மாதகல் வித்தியாலயத்தில் கட்டிடத் திறப்பு விழா…!

யாழ் மாதகல் நுனசை வித்தியாலயத்தில் இலங்கை கடற்படையினரால் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட மனையியல் ஆய்வுகூட அறையானது மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் (22.06.16) திறந்து வைக்கப்பட்டது..

இப்பாடசாலையில் நிலவிய மனையியல் அறை தேவைக்கான வேண்டுகோள், இப்பாடசாலையின் அதிபரினால் கடற்படையினரிடம் விடுக்கப்பட்டதற்கமைய இப்பிராந்திய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பணிப்புரைக்கேற்ப மேற்படி கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் இங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மனையியல் ஆய்வு கூடமானது, பாடத்துறை சார்ந்த சகல வசதிகளையும் அதற்கான சூழலையும் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். அத்துடன் கடற்படையினர் மேற்படி ஆய்வு கூடத்திற்கு அவசியமான சமையலறை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணத் தொகுதிகள் என்பவற்றை நன்கொடையாக வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அண்மையில் பொசன் பருவ காலத்தை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு விஜயம் செய்யும் பகதர்களின் பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் வகையில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைச்சேர்ந்த பல்வேறு குழுக்கள் அங்கு ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்புனித யாத்திரையின் போது பக்தர்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட அபய வாவி, நுவர வாவி, கலா வாவி, மகாகந்தராவ, விலாச்சிய, நாசசாதுவ, ராஜாங்கனைய மற்றும் தந்திரிமல ஆகிய நீர்நிலைகளில் சுமார் 11 உயிர் காப்பு வீரர்களை கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மற்றுமொரு நிகழ்வில் இலங்கை கடற்படைக்கப்பல் மகனக முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து காதிர்காமத்திற்கு இரு மாதங்களுக்கு மேலாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குழுவிற்கு நீர், உணவு, மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment