மகாதேவா ஆச்சிரம தலைவர் இராசநாயகம் ஐயா தலைமையில் வி.குகநாதன், வ.பாலமுரளி ஆகியோரால் வெளியிடப்பட்ட ‘கணிதம் தரம் 10′ நூலின் வெளியீட்டு விழா நிகழ்வுகள்…!

‘கணிதம் தரம் 10′ நூலின் வெளியீட்டு விழா – 15.05.2016 -அன்று ஜெயந்தி நகரிலுள்ள மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், சிறப்பு விருந்தினராக ஆறுதல் நிறுவனத்தின் ஆலோசகரும்,வலிகாம கல்வி வலய ஓய்வுநிலை கணிதபாட உதவிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாதேவாஆச்சிரம முகாமைத்துவ பணிப்பாளர் கோ.சற்குணபாலன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து தலைவர் தனது உரையில் கணிதம் ஆங்கிலம் என்றவுடன் முகத்தை சுழிக்கிறார்கள். இந்த நூல் மாணவர்களுக்கு நல்ல வழியில் வழி வகுக்கும். 10ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமன்றி தரம் 11 மாணவர்களுக்கும் இந்நூலினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
மகாதேவா ஆச்சிரம பதில் தலைவர் பொன் நித்தியானந்தன் வாழ்த்துரையின் போது இந்த நூல் வெளியீட்டு விழா இங்கு நடைபெறுவது கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும். இந்த நூல் வெளியீட்டு விழா இங்கு நடடைபெறுவது எமது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு க.பொ. த. சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு ஒரு நன்மை தருவதாக அமைகிறது. இந்த நூல் வெளியீட்டை எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு முன்மாதிரயாக இங்கே வைத்தது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும். இவ்வாசிரியர்களின் முன்மாதிரியான செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் தனது உரையில் அவர்களது நல்ல உள்ளத்தை பாராட்ட விரும்பியதால் முதலில் உயர் பட்ட படிப்புக்கள் பிரிவின் மாணவர்கள் என்பதால் கலந்து கொள்ள விரும்பினேன். பொதுவாக இவ்வாறான விடயங்களின் கலந்து கொள்வதில்லை. இவர்களது நிகழ்விலும் கலந்து கொள்ள நினைத்த போதும் மகாதேவா ஆச்சிரமத்தில் என்றவுடன் வேறு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இங்கு நடக்கும் நிகழ்வு அருமையான நிகழ்வு. மாணவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர முடியாது தவிக்கின்ற போது சுயமாக கற்க தமிழ் மொழில் நூல் வந்திருப்பது மிகவும் மகிழ்வு தருகிறது.
வடமாகாணத்தில் ஏ9 வீதியை அண்மித்து மையப்படுத்தி அனைத்தும் இருப்பதால் இங்கு வந்து போகிறவர்கள் வடமாகாணம் முழுமையாக அபிவிருத்தி அடைந்து விட்டது என்ற எண்ணத்துடன் செல்கிறார்கள். காப்பெற் போட்டு அழகாக தான் இருக்கிறது. ஆனால் ஒரு அடி எடுத்து உள்ளே வைத்து பார்த்தால் தான் போர் சூழ்நிலையில் வாழ்ந்து துன்பப்பட்டு இருப்பவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் என்பது புரியும்.
இங்கு வந்து போகிறவர்கள் இவர்களை கவனித்கத்தான் தவறி விட்டார்கள். அந்த வகையிலே இந் மாணவர்கள் நல்ல ஊக்கம் தரும் நிகழ்வாக இந்த இடத்தினை தெரிவு செய்து இங்கு இந்நூல் வெளியீட்டினை வைப்பது மிகவும் நல்ல ஒரு விடயம். இலவசமாக இந்த நூல் வழங்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இது மகிழ்வு தரும் விடயமாகும் என்று குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் நூலிற்கான ஆய்வுரையினை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தரம் 10,11 மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டன.
Nanilam இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

Share:

No comments:

Post a Comment