மாதகலில் கடந்த நான்கு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை…!

வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக , மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.


இதேவேளை , மழையுடன் கூடிய காலநிலை சிறிதளவு குறைவடைந்துள்ள போதும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது..…


Share:

No comments:

Post a Comment