மாதகலில் மீனவர் இளைப்பாறு மண்டபம் திறந்துவைப்பு…!

மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றும் வகையில் யாழ் சமூக செயற்பாட்டு மையமானது பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் USAID நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தால் மாதகல் சம்புவில்துறையில் ரூபா. 2.4 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவர்களுக்கான இளைப்பாறு மண்டபம் 29.04.2016 அன்று காலை 10.00 மணியளவில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பி.செந்தில்நந்தன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மீனவர்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது.
இதன் மூலம் புனித சூசையப்பர் கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் உதயதாரகை கடற்தொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த மீனவர்களுடன் சம்புவில்துறையில் தொழில் புரியும் அனைத்து மீனவர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.






Share:

No comments:

Post a Comment