மாதகல் கடலில் புதிய இன மீன்...!

மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

 

மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த 17 அடி நீள புதிய இன மீன் அகப்பட்டுள்ளது. இவ்வாறு அகப்பட்ட குறித்த மீன் தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீனானது சுறா மற்றும் திமிங்கல வகைகளைச் சாராத போதும், பாலூட்டி இனமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

 
இதனால் இவை தொடர்பான ஆய்வுக்காக இதன் புகைப்படங்கள் உடனடியாக கடல் உயிரினங்கள் ஆய்வு கூடத்துக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும் இதன் அறிக்கைகள் கிடைக்கும் வரை மீன் இனம் பாதுகாக்க முடியாத நிலையிலும், இதனை உணவுக்காகப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் ஏதும் ஒவ்வாமை ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவினைப் பெற்று அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

Share:

No comments:

Post a Comment