பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிய கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தினர்,கனடா வாழவைப்போம் அமைப்பினர்…!

கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தினர் ,கனடா வாழவைப்போம் அமைப்பினர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த மிதிலா திலிபன்,
ஆகியோரின் அனுசரணையில் உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில்,கிளி, முல்லை, வவுனியா ,யாழ்ப்பாணம், மன்னார், மாவட்டங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு,கிளிநொச்சி கனகபுரம் சோலைவனம் பயிற்சி மண்டபத்தில் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்குவதில் புலம்பெயர் உறவுகள் ஆற்றிவரும் பணி மகத்தானது! என குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை புலம்பெயர் உறவுகள் பல்வேறு வழிகளிலும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவருக்கான உதவிகளை சரியான முறையில் தேவைகளின் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பது எம் எல்லோருடைய கடமையும் ஆகும்.அதன் அடிப்படையிலே தான் புலம் பெயர் உறவுகளும் அவ்வாறான உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களின் பணி மகத்தானது அவர்கள் செய்கின்ற உதவிகளை நாம் சரியான பாதையில் எடுத்துச்செல்ல வேண்டும். இங்கே இருக்கக்கூடிய எமது உறவுகள் எங்கள் விடுதலைக்காக போராடியும் விபத்தின்போதும் கொடிய யுத்தத்தின்போதும் தமது அவயங்களை இழந்திருக்கிறார்கள்.அந்த உன்னதமானவர்களின் வாழ்வாதாரத்துக்கான பணிகளை புலம் பெயர் சொந்தங்கள் தொடர்ச்சியாக செய்து வருவதை நாங்கள் காண்கிறோம். இன்றைய தினம் இவ்வுதவிகளை வழங்கிவைத்த அமைப்பினர்க்கும் உதவிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு போரின் வடுக்களைச் சுமந்நு துன்பப்படும் எமது உறவுகளுக்கான உதவிகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் வடமாகணத்தைச்சேர்ந்த போரினால் மற்றும் விபத்துக்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் 106 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் உயிரிழை அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.Share:

No comments:

Post a Comment