தினக்குரலில் சுபாவின் கவித்தூறல் நூல் பற்றிய ஓர் விமர்சனம் வெளிவந்துள்ளது…!

 சுபாவின் கவித்தூறல் நூல்….
சுபோதினி சபாரத்தினத்தின் ‘சுபாவின் கவித்தூறல்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு மிக சிறப்பாக 13.02.2016 அன்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது…..
யோ.புரட்சி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடம் யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தி.வேல்நம்பியும் சிறப்பு விருந்தினராக பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை பிரதிஅதிபர் திருமதி இராஜலட்சுமி இராஜசேகரமும், கௌரவ விருந்தனராக சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய ஆசிரியை திருமதி அனுஷா ஈஸ்வரனும் கலந்து சிறப்பித்தனர்.
நூலிற்கான ஆய்வுரையை சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் வேலாயுதம் சிவராசா நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியினை பண்டத்தரிப்பு கிராமிய வங்கியின் வங்கிச்சேவை முகாமையாளர் பொ.தெய்வேந்திரம் பெற்றுக் கொண்டார்.   Share:

No comments:

Post a Comment