கனடா வாழ வைப்போம் அமைப்பின் ஊடாக கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தின் நிதியனுசரணையுடன் போரினால் பாதிக்கப்பட்டு குடும்பங்களாக…!

போரால் பாதிக்கப்பட்டு தங்கள் அபயவங்களை இழந்த நிலையில் இருக்கும் எமது உறவுகள் இன்று கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கனடா வாழ வைப்போம் அமைப்பின் ஊடாக கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தின் நிதியனுசரணையுடன் போரினால் பாதிக்கப்பட்டு குடும்பங்களாக கஸ்ரப்பட்டு கொண்டு இருக்கும் 03 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக நல்லின பசுக்கள் வழங்கும் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கடந்த வாரம் கிளிநொச்சியில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இதேவேளை இந்நிகழ்வில் நி.றொபின்றூபா அம்பாள்குளம் சாந்தபுரம் கிளிநொச்சி, க.விஜிதரன் புத்தடி கிழக்கு விசுவமடு, (முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்.) சோ.லயபதிராஜ் பாரதிபுரம் கிளிநொச்சி (முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்) பயனாளிகளுக்கான நல்லின பசுக்களை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

அந்த வகையில் மாதகல் முன்னேற்ற கழகத்தினர் கனடா வாழவைப்போம் அமைப்போடு இணைந்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்த உதவிகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம் என்றார்.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணங்களோடு செயற்பட்டுக்கொண்டு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கனடா வாழவைப்போம் அமைப்பு பல்வேறுபட்ட செயற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   Share:

No comments:

Post a Comment