மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 20ம் ஆண்டு நிறைவுவிழாவும், மாதகலின் முக்கிய குறிப்புக்களை கொண்ட நூல் வெளியிடும் கலைவிழா நிகழ்வுகள்…!

மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் கடந்த 20.09.2015 இளைஞர் சங்க கலையரங்கத்தில் இ.சஞ்சீவன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதுவர் ஏ.நடராஜனும் , சிறப்பு விருந்தினராக கோப்பாய் கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கமும், கௌரவ விருந்தினர்களாக கனடா மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் சபா அருள்சுப்பிரமணியமும், பிரான்ஸ் நலன்புரிச்சங்க உறுப்பினர் வீ.ரவீந்திரனும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் மாதகலின் சிறப்புக்களை தாங்கி வந்த ”மாதகல் மான்மியம்” எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலின் வெளியீட்டுரையினை பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜனும். மதிப்பீட்டுரையை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் நிகழ்த்தினர்.
மாதகல் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சமூக சேவையாளர் கௌரவிப்பும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் விசேடமாக அண்ணாவியார் யேசுதாசனின் நெறியாள்கையில் பாம்பு நடனமும் இடம்பெற்றது.

Share:

No comments:

Post a Comment