விழிப்புலனற்றோருக்கு ஓர் வரப்பிரசாதம் ‘DAISY’…!

2015- சுபோதினி சபாரத்தினம், மாதகல்…


சுயதேவைகளின் நிவர்த்திக்கான ஓட்டத்தின் நடுவில் உதவிக்கரம் தேடி சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ள துடிக்கின்ற பலர் எம் பார்வையில் இருந்து தூரே செல்கிறார்கள். எம் சமூகத்தில் அவர்கள் தேவைகளை நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விழிப்புலனற்றோருக்கு எம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

Digital Accessible Information System என்பதன் சுருக்கமே Daisy என கூறப்படுகிறது. இது ஆறு விதமான பிரிவுகளைக் கொண்டுள்ளது அதிலே விழிப்புலனற்றவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் Audio with NCC  (NCC  – Navigations Control Center)  – என்ற பகுதி காணப்படுகிறது.

இந்த முறையானது வழமையான ஒலிநாடாவில் பதிவேற்றி கேட்பதிலும் சற்று வேறுபட்டது. சாதாரணமாக நாம் ஒலிப்பதிவு செய்து வழங்குவது CD Playerஇல் கணனியில் கேட்க மட்டும் தான் முடியும். ஒரு புத்தகத்தின் 10ஆவது பக்கத்திலுள்ளதை கேட்பதாயினும் ஆரம்ப இடத்தில் இருந்தே அதனை செவிமடுக்கிறோம். ஆனால் இந்த Daisy முறையிலே காணப்படும் ஒலிப்பதிவானது ஒவ்வொரு புத்தகத்தின் பக்க இலக்கங்களும் குறிப்பிடப்பட்டு அதனை ஒலிப்பதிவு செய்யும் போது நாம் எத்தனையாவது பக்கத்திலுள்ள விடயத்தினைக் கேட்க வேண்டுமோ அதன் பக்க இலக்கத்தினை கொடுத்து அதனை செவிமடுக்க முடியும்.

கணனி அறிவுடைய ஒருவர் இதனை இலகுவில் கையாள முடியும். கணனி உலகத்திலே வாழும் அனைவரும் இன்று கணனியை கையாளத் தெரிந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். விழிப்புலனற்றவர் களும் கணனிகளை கையாளத்தெரிந்தவர்களாகவே பலர் காணப்படுகிறார்கள்.

கணனியில் மட்டுமன்றி Pendrive, கையடக்க தொலைபேசியில் கூட இவற்றை பதிவேற்றம் செய்து அதனை செவிமடுக்க முடியும். அதுமட்டுமன்றி வெளியில் செல்லும் போது அவற்றை தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பதை கேட்டு தமக்கு தேவையான விடயங்களை மற்றவர்கள் உதவியற்று இலகுவில் அறிய மிகவும் வாய்ப்பளிக்கிறது.

கணனியில் இதனை ஒலிப்பதிவு செய்வது என்பதனை எடுத்து நோக்கும் போது
அதற்கான தனியான ஒரு மென்பொருள் அதாவது நாம் தட்டச்சு (Type) செய்ய வேண்டும் எனில் எம்.எஸ் வேடில் (MS.Word)இல் ரைப் செய்வது போல புத்தகத்தினை ஒலிப்பதிவு செய்ய சிக்துனா டாா் 3 Sigtuna DAR3 என்ற ஒரு மென்பொருளை கணனியில் பதிவேற்ற வேண்டும். அந்த மென்பொருளினை பயன்படுத்தி இவற்றை இலகுவில் ஒலிப்பதிவு செய்ய முடியும். இவற்றை செயற்படுத்த தேவையானது ஒரு கணினியும் Headphone உம் மட்டுமே.

இன்று பாடசாலையில் வழங்கப்படும் புத்தகங்களை விழிப்புலனற்றோருக்கு வாசித்து விடுவதற்கு ஆட்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். அதுமட்டுமன்றி ஒருவருக்கு வாசித்து பின்பும் அதே வகுப்;பை சேர்ந்த இன்னொருவருக்கு அதே பாடப்புத்தகத்தை திரும்ப வாசிக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறான நிலையை தவிர்ப்பதற்கு ஒலிப்பதிவு செய்து அதனை பிரதி செய்து சகல மாணவர்களிற்கும் வழங்க பலரது நேரம் மிச்சமாகும். இதற்கான செயன்முறையை பற்றிய இலவச கையேடு அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் வழங்கப்பட இருக்கிறது.

இந்தக் கையேடு தொகுத்து தருவதற்கான நோக்கமும் தேவையும்
விழிப்புலனற்ற மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான நூல்களை அவர்கள் இலகுவில் கேட்டு கற்றுக்கொள்ள இந்த Daisy முறையிலான ஒலிப்பதிவு உதவுகிறது. இன்று எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதனை வாசித்து விடுவதற்கு ஏனையோருக்கு தற்போது நேரம் போதாது இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு எம் போல், விழிப்புலனற்றவர்களும் அனைத்து நூல்களையும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த னுயளைல முறையிலான தொகுப்பை வெளியிட்டு உள்ளோம்.

நோக்கம்
இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தம்மால் அவர்களுக்கு உதவ விரும்பியவர்கள் ஒலிப்பதிவு செய்து நூல்களை வழங்க வேண்டும். அத்துடன் இக்கைநூல் அனைவரது கைகளிலும் இருந்தால்தான் அதனை செயற்படுத்த முடியும். ஆகவேதான் இதனை இலவசமாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணிணியில் ஒலிப்பதிவு செய்ய விரும்பியவர்கள் தங்களிடம் இருக்கும் நூல்களை ஒலிப்பதிவு செய்து இவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாகும்.

வேண்டுகோள்
இனிவரும் காலங்களில் நூல்களை வெளியிடுபவர்களும். தற்போது நூல்களை வெளியிட்டவர்களும் இந்த Daisy முறையிலான வடிவில் நூல்களை வழங்கி விழிப்புலனற்றோருக்கம் தாங்கள் மற்றவர்களுக்கு சொல்ல வந்த செய்தி அல்லது தங்களின் ஆக்கங்கள் போய் சேர துணைபுரிய வேண்டும்.

நானிலம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment