பண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லையின் முச்­சக்­கர வண்டி இல­வச சேவை ஆரம்ப நிகழ்வு…!

பண்­டத்­த­ரிப்பு பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யா­னது ஏழு கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய வைத்­தி­ய­சா­லை­யாக காணப்­ப­டு­கி­றது. 1992ஆம் ஆண்­டுக்கு முன்னர் 4 வைத்­தி­யர்கள் கட­மை­யாற்­றிய வைத்­தி­ய­சாலை யுத்த சூழலால் முற்­றாக பாதிக்­கப்­பட்டு பின்னர் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.
எனினும் வைத்­தி­ய­சா­லையில் ஆளணி பற்­றாக்­குறை காணப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் மற்றும் ஊழி­யர்கள் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. இதனால் இப் பகுதி மக்கள் தமக்­கான போதிய வைத்­திய சேவையை பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது.
இங்கு வறுமைக்கோட்­டிற்கு உட்­பட்ட மக்­களே அதிகம் காணப்­ப­டு­வ­தனால் இவ் வைத்­தி­ய­சா­லையின் தேவைகள் நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். ஆளணி பற்­றாக்­கு­றை­ மற்றும் வைத்­தி­ய­சா­லைக்கு செல்லும் பிர­தான வீதி அக­ல­மாக்­கப்­பட வேண்டும். மேலும் பஸ் தரிப்­பிட நிலை­யமும் அமைத்து தரப்­பட வேண்டும். பிர­தான வீதி அக­ல­மாக்­கப்­ப­டு­வதன் மூலம் தனியார் சிற்­றூர்தி சேவை வைத்­தி­ய­சா­லை­வ­ரையும் சென்று வர­மு­டியும் என சிற்­றூர்தி உரி­மை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இவ் வைத்­தி­ய­சா­லையின் சுற்­று­ம­திலை அமைப்­ப­தற்­கான பணிகள் வட­மா­காண சபையின் உறுப்­பி­னர்­களின் நிதி­யு­தவி மற்றும் பொது­மக்கள், புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் நிதி உத­வி­யுடன் நடை­பெற்­று­ வரு­கின்­றன.
எனவே வைத்­தி­ய­சா­லையின் ஆள­ணிப்­பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்வ­துடன் தரத்தினையும் உயர்த்துமாறு வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலவச முச்சக்கர வண்டி சேவையினை வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆரம்பித்து வைத்த போது மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
Share:

No comments:

Post a Comment