மாதகலில் திறந்து வைக்கப்பட்ட உணவு உற்பத்தி நிலையம் வடக்கு மாகாணத்தின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதகல் கிராமத்தில் உணவு உற்பத்தி நிலையம் நேற்று (திங்கட்கிழமை) வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது...!

இந்த உணவு உற்பத்தி நிலையமானது, வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக இந்த உணவு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு, வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை தவிசாளர் மகேந்திரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு ஜே.ஜே.சி.பெலிசியன், காணி அன்பளிப்பாளர் என பலருமவருகை தந்திருந்தனர்.
மேலும் இந்த திட்டமானது, இரண்டு மில்லியன் செலவில் மாதகல் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment