யா/ மாதகல் சென் யோசப் மகாவித்தியா இளைஞர் கழகத்தின் புனரமைப்புக் கூட்டம்…!

பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய இளைஞர் கழகத்துடனான கலந்துரையாடல் ஒன்று (23) பாடசாலையில் இடம்பெற்றது.

கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாகவும் முக்கியமாக ஆராயப்பட்டது.
கழக நிர்வாகிகளினால் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்க ஆவன செய்வது எனவும், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலை இளைஞ கழகத்திற்காக பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவுகளிற்கு பாடசாலை அதிபரினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய அதிபர் ஜேம்ஸ் பங்குராசு, கழகத்தின் பொறுப்பாசிரியர் சலுஜன், பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், ஆனைக்கோட்டை இளைஞர் கழகத் தலைவர் F.X.D.கூரே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
pix: DIYO 
Share:

No comments:

Post a Comment