மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுக் கழுகுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை கைது…!

யாழ். மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுக் கழுகுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை  செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார்.


அத்துடன், இவர்களிடமிருந்து 3 கழுகுகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

மாதகல், சேந்தாங்குளம் பகுதிக்கு இந்தக் கழுகுகள்பறந்து வந்திருந்தபோது, அந்தக் கழுகுகளை  பிடித்து விற்பனை செய்யும் தங்களது  வீட்டில் இந்தச் சந்தேக நபர்கள் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
Share:

No comments:

Post a Comment